
முக்கிய செய்திகள்
கொள்ளுப்பிட்டியில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விடுதி – பெருந்தொகை பணத்துடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்
கொள்ளுப்பிட்டி – காலி வீதியில் உரிமமின்றி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 சீன நாட்டுப்பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி வீதியில் இயங்கி வந்த இரவு விடுதியொன்றினை நேற்று இரவு (27) முற்றுகையிட்டபோதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



