
24 மணி நேரத்தில் 3 மலைச் சிகரங்கள்… கேட் மிடில்டன் அசத்தல் சாதனை!
புற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு, பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். National Three Peaks Challenge என்ற கடினமான சவாலை வெற்றிகரமாக முடித்து, இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்த சவாலின் ஒரு பகுதியாக, ஸ்காட்லாந்தின் பென் நெவிஸ் (Ben Nevis), இங்கிலாந்தின் ஸ்காஃபெல் பைக் (Scafell Pike) மற்றும் வேல்ஸின் ஸ்னோடன் (Snowdon) ஆகிய பிரிட்டனின் மிக உயரமான மூன்று சிகரங்களையும் அவர் ஏறினார்.

இந்த சவாலில் சுமார் 37 கிலோமீட்டர் நடைப்பயணமும், 10,000 அடிக்கும் அதிகமான மலை ஏற்றமும் இடம்பெற்றிருந்தது. இதனை அவர் நிர்ணயிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
இந்த முயற்சியின் மூலம், புற்றுநோயிலிருந்து மீண்ட பின்னரும் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைப்பதோடு, தனக்குச் சிகிச்சை அளித்த லண்டனிலுள்ள Royal Marsden Cancer Hospital-க்கு நிதி திரட்டும் நோக்கத்தையும் அவர் முன்னெடுத்தார்.

இந்த கடினமான பயணத்தை பெரும்பாலும் தனியாக மேற்கொண்ட கேட் மிடில்டன், இறுதியாக வேல்ஸின் ஸ்னோடன் சிகரத்தை அடைந்தபோது, அவரது கணவர் இளவரசர் வில்லியம், குழந்தைகள் மற்றும் பெற்றோர் உற்சாகமாக வரவேற்றனர்.
கேட் மிடில்டன் 2024 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த அவர், தற்போது இந்த வரலாற்றுச் சாதனையின் மூலம் பலருக்கும் தன்னம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் சின்னமாக திகழ்கிறார்.



