விசேட அம்சங்கள்

நாடளாவிய ரீதியில் கொண்டாட்டப்படும் வெசாக் பண்டிகை – திரளும் பொதுமக்கள்

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெசாக் கொண்டாட்டம் வலையமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்று(30.05.2026) யாழ்ப்பாணம் – நாக விகாரையின் விகாராதிபதி மீகஹ ஜந்துர ஸ்ரீ விமல ஸ்வாமி தேரர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வெசாக் தினக் கொண்டாட்டம்

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரிஜந்த நவரத்ன, 51 ஆவது படைப்பிரிவின் சேனாதிபதி மேஜர் ஜெனரல் ரிஸ்வி ராசிக், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உமாகாந்தன் சிவகாமி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் சர்வமத தலைவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, வெசாக் தினத்தில் புத்தரின் பிறப்பு, இறப்பு, பரிநிர்வானம் அடைந்த வைகாசி பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, அவரின் வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய ஒளியூட்டப்பட்ட அலங்காரங்கள் வெசாக் வலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும், பெளத்த பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டுள்ளதுடன், வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button