
G7 மாநாட்டில் டிரம்புடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி
பிரான்ஸில் நடைபெற்ற G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து கலந்துரையாடினார்.
பிரான்ஸின் ஏவியான்-லெ-பெய்ன்ஸ் (Évian-les-Bains) நகரில் நடைபெற்ற 52ஆவது G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் அன்புடன் வரவேற்றார்.

மாநாட்டு அரங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துக்கொண்டனர். அப்போது இரு தலைவர்களும் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதுடன், டிரம்ப் மோடியின் தோளைத் தட்டி நட்புறவை வெளிப்படுத்தினார்.
பின்னர், “புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புதல்” என்ற தலைப்பிலான அமர்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தனது கருத்துக்களை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, G7 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக உலகத் தலைவர்கள் பாரம்பரிய குழுப் புகைப்படத்திற்காக ஒன்றுகூடினர். அந்த புகைப்படத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் முதல் வரிசையில் பிரதமர் மோடி இடம்பெற்றிருந்தார்.

G7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது இது 13ஆவது முறையாகும். மேலும், தொடர்ச்சியாக ஏழாவது முறையாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய பொருளாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.



