முக்கிய செய்திகள்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் இன்று 13 மணி நேர நீர்வெட்டு

எம்பிலிப்பிட்டிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (19) பல பகுதிகளில் 13 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஹுலந்தாவா பாலம் அருகே குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இந்த தற்காலிக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

இதன்படி, மித்தேனிய வீதி மற்றும் ஹுலந்தாவா பாலம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நீர் வழங்கல் தடைப்படவுள்ளது.

தற்காலிக நீர்வெட்டால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள NWSDB, பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே தேவையான அளவு நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், கிடைக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் வழமையான நீர் வழங்கல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button