
நடு இரவில் திடீரென விழிக்கிறீர்களா? அலட்சியம் செய்யாதீர்கள்…
இரவில் திடீரென தூக்கம் கலைந்து விழிப்பது சாதாரணமாகத் தோன்றினாலும், சில நேரங்களில் அது உடல்நலப் பிரச்சனைகளின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மருத்துவர் டாக்டர் பைரவி சுந்தூரி வழங்கிய தகவலின்படி, வாயுத் தொல்லை மற்றும் மாரடைப்பு அறிகுறிகளை சரியாகப் பிரித்தறிவது மிகவும் அவசியம். வாயு வலி பொதுவாக உணவு பழக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஆனால் மாரடைப்பு ஏற்பட்டால், கடுமையான நெஞ்சுவலி, அதிக வியர்வை, இதயத் துடிப்பு அதிகரித்தல், வாந்தி, கடுமையான சோர்வு, கை அல்லது தோள்பகுதியில் வலி போன்ற அறிகுறிகளும் இணைந்து தோன்றும்.

மேலும், நடு இரவில் மூச்சுத்திணறலுடன் திடீரென விழிப்பது, நீரிழிவு நோயாளிகளில் இரத்தச் சர்க்கரை திடீரெனக் குறைவதால் ஏற்படும் ஹைப்போகிளைசீமியா அல்லது Obstructive Sleep Apnea போன்ற தீவிர தூக்கக் கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
இதுபோன்ற அறிகுறிகள் அடிக்கடி தென்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது பல உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்க உதவும்.



