
கொழும்பு போர்ட் சிட்டியில் புதிய கிளையைத் திறந்த சம்பத் வங்கி
சம்பத் வங்கி பிஎல்சி (Sampath Bank PLC), கொழும்பு போர்ட் சிட்டியில் தனது புதிய கிளையை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து, இலங்கையை உலகளாவிய முதலீட்டு மற்றும் நிதி மையமாக உருவாக்கும் முயற்சிக்கு தனது ஆதரவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த திறப்பு விழாவில் சம்பத் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், உயர்மட்ட நிர்வாகிகள், கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழுவின் (CPCEC) பிரதிநிதிகள், CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கொழும்பு போர்ட் சிட்டியின் வணிக மையத்தின் (Business Centre) கட்டிடம் 1-இல் அமைந்துள்ள இந்த புதிய கிளை, இலங்கையின் முதல் பல்சேவை சிறப்பு பொருளாதார வலயத்தில் (Special Economic Zone) இயங்கும் முக்கிய வங்கி கிளைகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த கிளை திறக்கப்பட்டதன் மூலம், போர்ட் சிட்டிக்குள் இடம்பெற்ற முதல் வங்கி பரிவர்த்தனையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையின் வளர்ந்து வரும் சர்வதேச நிதி மையத்தின் மற்றொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்னர், 2025 ஆம் ஆண்டில் போர்ட் சிட்டி மாலில் (The Mall at Port City Colombo) பண வைப்பு மற்றும் பணப் பெறுதல் வசதிகளுடன் கூடிய Cash Recycler Machine (CRM) ஒன்றை நிறுவியதன் மூலம், அந்தப் பகுதியில் வங்கிச் சேவைகளுக்கான முதல் அணுகலை சம்பத் வங்கி ஏற்படுத்தியிருந்தது.
புதிய கிளையில் CRM உள்ளிட்ட சுயசேவை வங்கிச் சேவைகள் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் பணப் பெறுதல், பண வைப்பு மற்றும் அன்றாட வங்கிப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழுவின் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனமாக விளங்கும் சம்பத் வங்கி, அங்கு செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிக நிறுவனங்களுக்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணய வங்கிச் சேவைகள், முதலீட்டு கணக்குகள், வர்த்தக நிதிச் சேவைகள், சர்வதேச பணப் பரிமாற்றங்கள், கருவூல சேவைகள் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நிதித் தீர்வுகளை வழங்கவுள்ளது.
இந்த புதிய கிளையின் திறப்பு, தெற்காசியாவின் முன்னணி வணிக மற்றும் நிதி மையமாக போர்ட் சிட்டி கொழும்பு வளர்ச்சியடைவதற்கு தேவையான நிதி கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவ ஆதரவை வழங்கும் சம்பத் வங்கியின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

