உயர்தரப் பரீட்சை முடியும் வரை பயிற்சி வகுப்புகள் நடத்த தடை
2025 உயர்தரப் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் 4 முதல் தடை
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பொதுப் பரீட்சை (G.C.E. A/L) தொடர்பான தனியார் பயிற்சி வகுப்புகள், சொற்பொழிவுகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்தும் நவம்பர் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகத் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தடை, பரீட்சை காலம் முடியும் வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட உயர்தரப் பொதுப் பரீட்சைகள் நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
தேர்வுத் திணைக்களம், பரீட்சையின் நம்பகத்தன்மையும் நேர்மையையும் பாதுகாப்பதற்காக இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|