LPL சீசன் தொடர்பில் வெளியாக முக்கிய அறிவிப்பு
2025 இலங்கை பிரீமியர் லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டு 2026ல் நடைபெறும்
ஐந்து அணிகள் மோதும் புதிய LPL சீசனில் கிறிஸ் கேல் அதிகாரப்பூர்வ தூதர்
2025 இலங்கை பிரீமியர் லீக் (LPL) போட்டி ஜூலை-ஆகஸ்ட் 2026ல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட் கழகம் (SLC) வழங்கிய தகவலின் படி, 2025 ஆம் ஆண்டுக்கான LPL தொடர் முதலில் இந்த ஆண்டு டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 2026 ஆம் ஆண்டுக்கான T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மைதானத் தயாரிப்புகளை மேற்கொள்வதற்காக, இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த LPL சீசனில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ளன. கொழும்பு, தம்புள்ளை, காலி, யாழ்ப்பாணம் மற்றும் கandy அணிகள் கோப்பைக்காக மோதவுள்ளன.
மேலும், மேற்கிந்தியத் தீவுகளின் பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கேல், 6வது சீசனுக்கான இலங்கை பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|