26வது தமிழர் விளையாட்டு விழா – இதோ உங்களுக்காக..!
தமிழ் கலாசாரத்தின் சிறப்பைச் சொல்வதற்கான ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி
26வது தமிழர் விளையாட்டு விழா - பல நிகழ்ச்சிகளும் சுவாரசியங்களும்
தமிழர் கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையை விளையாட்டு ஊடாக வலியுறுத்தும் முக்கிய நிகழ்வாக விளங்கும் 26வது தமிழர் விளையாட்டு விழா (26ème Festival Tamoul), வரும் ஜூலை 6, 2025 (ஞாயிறு) அன்று பிரான்ஸின் Dugny Georges-Valbon பகுதியில் உள்ள L’Aire des Vents மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வை, ORT France, IMTC மற்றும் பல சமூக அமைப்புகள் இணைந்து நடாத்துகின்றன. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒண்றினைத்து, விளையாட்டு, கலாச்சாரம், உறவுகள் ஆகிய அனைத்தையும் கொண்டாடும் இவ்விழாவில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
குறித்த விழாவில்,
பல்வேறு விளையாட்டு போட்டிகள்
பெறுமதிமிக்க Tombola கார் மற்றும் 100 யூரோ மதிப்புள்ள 100 ஆறுதல் பரிசுகள்
பாரம்பரிய நடனம், இசை மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சிகள்
தமிழர் உணவுப்பண்டங்கள், கலை விளக்கக்காட்சிகள்
சமூக சேவை, நல விழிப்புணர்வு நடவடிக்கைகள்
போன்றவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்வு விவரம்:
இடம்: L’Aire des Vents, 10 Rue Normandie Niemen, 93440 Dugny, France
திகதி: 06 ஜூலை 2025 (ஞாயிறு)
நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 08:00 மணி வரை
"சிறப்பாக செயல்பட ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இவ்விழா, உங்களதும் உங்கள் குடும்பத்தாரினதும் அனுபவத்தை மகிழ்ச்சியானதாக மாற்றும்!
வீடியோவை பார்வையிட..,
A post shared by Tamilmedia (@tamilmedia_)