இலங்கை
இதுவரை 35 மலேரியா நோய்த்தொற்றுகள்; ஒருவர் மரணம் உறுதி
byKirthiga|20 days ago
இலங்கையில் 35 மலேரியா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன – ஒருவர் உயிரிழப்பு
இவ்வாண்டு இதுவரை 35 மலேரியா நோய்த்தொற்றுகள்; ஒருவர் மரணம் உறுதி
இலங்கையில் இவ்வாண்டு இதுவரை மொத்தம் 35 மலேரியா நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன என மலேரியா ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதில் ஒருவரின் மரணமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா நோயிலிருந்து முற்றிலும் விடுபட்ட நாடாக அறிவிக்கப்பட்டது. எனினும், அண்மைக்காலமாக பதிவாகியுள்ள புதிய நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களிடம்தான் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து மலேரியா ஒழிப்பு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் இந்தீவரி குணரத்ன தெரிவித்ததாவது, “மலேரியா குறித்து மேலும் தகவல் பெற விரும்பும் பொதுமக்கள் 071 284 1767 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்” என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|