Home>இலங்கை>திருகோணமலை கடலில் 3....
இலங்கை

திருகோணமலை கடலில் 3.9 ரிக்டர் நிலநடுக்கம்

byKirthiga|about 2 months ago
திருகோணமலை கடலில் 3.9 ரிக்டர் நிலநடுக்கம்

திருகோணமலைக்கு 60 கிமீ தொலைவில் நிலநடுக்கம் – புவியியல் துறை தகவல்

மகாகனதர, ஹக்மான, பல்லேகலே, புத்தங்கல நிலநடுக்கமானிகளில் பதிவு

திருகோணமலை கடல் பகுதியில் இன்று (18) மாலை 4.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம், திருகோணமலை நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் கடல்பகுதியில் ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த அதிர்வு நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்கமானிகள் மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை மகாகனதர, ஹக்மான, பல்லேகலே மற்றும் புத்தங்கல ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, இந்த நிலநடுக்கம் சிறிய அளவிலானது என்பதால், இதனால் மக்களின் வாழ்விலும் சொத்துக்களிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஆனால், புவியியல் துறை தொடர்ந்து நிலையை கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்