கடலில் மூழ்கிய 5 நகரங்கள் – மர்மமும் வரலாறும்
வரலாறு சொல்கின்ற கடலின் அடிப்பகுதி ரகசியங்கள்
தீராத மரமம் - இன்று வரையில் கடலுக்குள மூழ்கிக்கிடக்கும் அதிசய நகரங்கள்
உலகில் பல ஆச்சரியமான விஷயங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதேபோன்று, திடீரென மாயமான சில நகரங்களும் உள்ளன.
ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்து வந்த இடத்தில், இன்று அமைதி மட்டுமே உள்ளது. இந்த நகரங்கள், கடலின் ஆழத்தில் மறைந்துள்ளன. ஆனால், அவற்றின் கதைகள் தற்போதும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
ஒரு காலத்தில் குழந்தைகளின் சிரிப்பு மற்றும் பண்டிகைகளின் மகிழ்ச்சி ஆகியவற்றால் நிரம்பிய நகரங்கள், இன்று தண்ணீருக்கு அடியில் அமைதியாக இருக்கின்றன.
இவை வெறும் கட்டடங்கள் அல்ல, காலத்தின் கொடுமையைச் சொல்லும் சாட்சிகள்.
இத்தாலியின் பாயா நகரம்: வெந்நீர் ஊற்றுகள் மற்றும் அரச அரண்மனைகளுக்குப் புகழ்பெற்ற பாயா, ரோமானிய பேரரசர்களின் விருப்பமான நகரமாக இருந்தது. எரிமலை வெடிப்புகள் காரணமாக இது கடலில் மூழ்கியதாக வரலாறு கூறுகிறது.
எகிப்தின் தோனிஸ்-ஹெராக்லியன்: ஒருகாலத்தில் வர்த்தகமும் மதத்திற்கும் மையமாக இருந்த இந்த நகரம், நைல் நதியின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால் கடலில் மூழ்கியது. தொல்பொருள் ஆய்வுகள் இதன் வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.
பிரிட்டனின் டெர்வென்ட் நகரம்: இயற்கை பேரழிவு இல்லாமலேயே, 1930களில் நீர்த்தேக்கத்தைக் கட்டும் பொருட்டு வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்ட நகரம் இது. நீர் குறையும்போது நகரின் இடிபாடுகள் இன்னமும் தெரியவந்துகொண்டிருக்கின்றன.
அர்ஜென்டினாவின் வில்லா எபிகுயன்: அதன் அற்புதமான உப்பு நீருக்குப் பிரபலமான இந்த நகரம், 1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் 10 மீட்டர் ஆழம் வரை மூழ்கியது. பல தசாப்தங்களுக்குப் பிறகு தண்ணீர் வடிய, அதன் இடிபாடுகள் வெளிப்பட்டன.
ஜமைக்காவின் போர்ட் ராயல்: கடற்கொள்ளையர்களின் கோட்டையாக இருந்த இது, 1692 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக கடலடியில் புதைந்து விட்டது.