ஹார்டன் பிளெயின்ஸில் 50 பேருக்கு அபராதம்
விதிமுறைகள் மீறல் – பாதை விட்டு விலகியவர்களுக்கு சட்ட நடவடிக்கை
நேலு மலர் காண வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை – அதிகாரிகள் கடுமையான கண்காணிப்பு
கடந்த ஒரு வாரகாலத்தில், ஹார்டன் பிளெயின்ஸ் தேசிய பூங்காவில் விதிமுறைகளை மீறிய 50 பேருக்கு இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பூங்கா காவலர் சிசிர ரத்நாயக்க தெரிவித்தார்.
பூங்காவின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட பாதைகளை விட்டு விலகுதல், தாவரங்கள் அல்லது உயிரினங்களை சேதப்படுத்துதல், பூங்காவின் இயற்கைச் சூழலை குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்குவதற்காக பாதைமீறிச் சென்றவர்கள் மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்கள்மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
“தேசிய பூங்கா என்பது விலங்குகள் மற்றும் இயற்கைச் சூழலைக் கவனிப்பதற்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. பாதைமீறுதல், மலர்களை பறித்தல், விலங்குகளுக்கு உணவளித்தல் போன்ற செயல்கள் சட்டவிரோதமானவை” என ரத்நாயக்க கூறினார்.
சமீபத்தில் அரிதாக மலரும் ‘நேலு’ மலரைக் காண பல சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் பூங்காவை அணுகி வருவதால், பாதுகாப்பு விதிகளை கடுமையாகப் பின்பற்றுமாறு சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|