பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ரோபோ சங்கர்
நடிகர் ரோபோ சங்கர் மரணம்!
தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரோபோ சங்கர் இன்று சற்று முன் காலமானார்.
சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான அவர், பின்னர் வெள்ளித்திரை படங்களிலும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்தார்.
விஜய்யின் புலி, அஜித்தின் விஸ்வாசம், தனுஷின் மாரி, சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனித்த இடத்தை பிடித்தார்.
சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பில் பங்கேற்றபோது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் அவர் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், இன்று (18) மருத்துவர்களின் முயற்சிகள் பலனளிக்காமல் ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு குறித்து அறிந்த திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பும் அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|