இந்தியர்களுக்கு மலிவு ஐரோப்பிய சுற்றுலா நாடுகள்
ஆஸ்திரியா முதல் எஸ்டோனியா வரை - மலிவு விலையில் ஐரோப்பா சுற்றுலா!
இந்தியர்களுக்கான மலிவு ஐரோப்பிய டூரிசம் பட்டியல்
பல இந்திய பயணிகளுக்கு ஐரோப்பா சுற்றுலா கனவாகவே இருக்கிறது, ஆனால் செலவுகள் அதிகம் என்பதாலே அந்த கனவு பின்தங்குகிறது.
இதற்கு மாற்றாக, ஃபோர்ப்ஸ் வெளியிட்ட புதிய வழிகாட்டியில் மலிவு விலையில் சுற்றுலா செய்யக்கூடிய ஐரோப்பிய நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா – ரூ. 69,000 முதல் விமான டிக்கெட்டுகள்; ஆல்ப்ஸ் மலைச்சிகரங்கள், கலாச்சார விழாக்கள், வியன்னா & சால்ஸ்பர்க் நகரங்கள்.
பல்கேரியா – ரூ. 98,000 முதல் டிக்கெட்டுகள்; கருங்கடலின் தங்கக் கடற்கரை, மலைப்பாங்கான இயற்கை அழகு, வரலாற்று சின்னங்கள்.
செக் குடியரசு (பிராகா) – ரூ. 60,000 முதல்; அழகான அரண்மனைகள், பாறை அமைப்புகள், திறமையான போக்குவரத்து வசதி.
டென்மார்க் – ரூ. 64,000 முதல்; கோபன்ஹேகன் நகரம், லிட்டில் மெர்மெய்ட் சிலை, அழகிய கால்வாய்கள்.
எஸ்டோனியா – ரூ. 74,000 முதல்; தாலின் பழமையான நகரம், இடைக்கால கட்டிடக்கலை, இயற்கை அழகு.
தினசரி ரூ. 9,000 – ரூ. 10,500 வரை செலவில் இந்த நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.
விசா கட்டணம் சுமார் ரூ.7,200 – ரூ.7,600 + VFS சேவை கட்டணம் ஆகும்.
இந்தியர்கள் இப்போது தங்கள் கனவு ஐரோப்பிய பயணத்தை மலிவு விலையில் நனவாக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|