Home>இந்தியா>கரூர் விபத்து குறித்...
இந்தியாஅரசியல்

கரூர் விபத்து குறித்து மனம்திறந்த நடிகர் அஜித்!

byKirthiga|8 days ago
கரூர் விபத்து குறித்து மனம்திறந்த நடிகர் அஜித்!

கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு பிறகு முதன்முறையாக மனம் திறந்த அஜித் குமார்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்த அஜித் குமார்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் முதல் முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில், குழந்தைகள் 10 பேர் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமிழ்நாடு வெற்றிக் கழகம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நடிகர் அஜித் குமார் கரூர் சம்பவம் குறித்து தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:

“இந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒரே ஒருவரை மட்டும் குற்றவாளி எனச் சொல்ல முடியாது. அனைவரும் அதற்குப் பொறுப்பு. ஒரு கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்கிறார்கள், ஆனால் அங்கு நெரிசல் ஏற்படுவதில்லை. ஆனால் சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் இது ஏன் நடக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இப்போது நாம் யார் என்பதை பெரிய கூட்டம் மூலம் காட்டும் கலாச்சாரம் உருவாகி விட்டது. இது முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது. இத்தகைய சம்பவங்களால் முழு திரைத்துறையும் தவறாக சித்தரிக்கப்படுகிறது — அதை நாங்கள் விரும்பவில்லை.

ரசிகர்களின் அன்பை நாங்கள் உண்மையிலேயே மதிக்கிறோம், அதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம். ஆனால் அந்த அன்பை வெளிப்படுத்தும் வழி பாதுகாப்பானதும், மனிதநேயமானதும் இருக்க வேண்டும்.”

என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


#AjithKumar About KARUR STAMPEDE 👏 pic.twitter.com/iQiHQnxZTq

— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) October 31, 2025




செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்