அம்பானி குடிக்கும் பாலின் விலை எவ்வளவு தெரியுமா?
அம்பானி குடும்பம் பருகும் பாலின் விலையை கேட்டால் தலையே சுற்றும்..!
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ஆடம்பர வாழ்க்கை குறித்து பல வகையான செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும்.
அந்தவகையில் தற்போது முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் தினமும் பருகும் பசும் பால் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் அருந்தும் பாலானது சாதாரணமானது அல்ல. அவர்கள் பயன்படுத்தும் பால் வகை, அதன் தரம் மற்றும் விலை தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அம்பானி குடும்பம் குடிக்கும் பால்...
அம்பானி குடும்பம் குடிக்கும் பால் சாதாரண பசும்பால் அல்ல. அவர்கள் ஹோல்ஸ்டீன்-ஃப்ரீசியன் (Holstein-Friesian) என்ற மிக உயர்தரமான இன மாடுகளிடமிருந்து கரக்கப்படும் பசும் பாலைதான் பயன்படுத்துகிறார்கள்.
இந்த பசுக்கள் நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவை ஆகும். ஒரு நாளில் 25 லிட்டருக்கும் மேல் பாலை வழங்கும் திறனுள்ள இந்த பசு, பொதுவாக 680 முதல் 770 கிலோ வரை எடையுடன் இருக்கும்.
புனேயில் உள்ள பாக்யலட்சுமி பண்ணையில்தான் இந்த ஹோல்ஸ்டீன் இன மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த பண்ணையில் சுமார் மூவாயிரத்திற்கும் மேல் மாடுகள் உள்ளன.
இந்த மாடுகள் சாதாரண மாடுகளை போல் வளர்க்கப்படுவதில்லை. அதாவது RO தண்ணீர் குடித்து, பஞ்சு போன்ற மெத்தையில் தான் ஓய்வு பெறுகிறது.
இதனால் தான் அப்பசுவின் விலையும் அதிகமானதாக இருக்கிறது.
இந்த பசும்பாலின் விலை எவ்வளவு தெரியுமா?
இந்த பசும்பாலின் விலை சாதாரணமாக கிடைக்கும் பசும்பாலைவிட மூன்றுமடங்குக்கும் மேலாக இருக்கிறது. ஒரு லீற்றர் பால் இந்திய ரூபாயில் ரூ.152 ஆகும். இலங்கை மதிப்பில் பார்த்தால், ரூ.550.41 வரை செல்லும்.
அம்பானி குடும்பம் குடிக்கும் பசும்பாலின் விலை மட்டும் இல்லாமல், அதன் தரம், பராமரிப்பு மற்றும் அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளும் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளது.