ஆந்திரா கோவிலில் நெரிசல் விபத்து – 9 பேர் பலி
எகாதசி விழாவின்போது நெரிசல் பரபரப்பு – பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பு
ஆந்திராவில் கோவில் நெரிசல் விபத்து – பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் பலி
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோவில் நெரிசல் விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்களாக உள்ளனர்.
இச்சம்பவம் எகாதசி தினத்தை முன்னிட்டு காசிபுகா பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்டது. கோவிலுக்குள் தரிசனத்திற்காக திரண்டிருந்த பெரும்தொகையான பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து பரவிய வீடியோக்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜைப் பொருட்களுடன் கூட்டத்தில் தள்ளுமுள்ளாக அச்சத்துடன் ஓடுவதும், சிலர் படிக்கட்டுகளில் மிதிபட்டு விழுவதும் காணப்பட்டது. விபத்துக்குப் பின் கோவில் வளாகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பரவி கிடந்தன.
சிலர் மயங்கி விழுந்த நிலையில் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மருத்துவர்கள் அவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆந்திரா ஆளுநர் அப்துல் நஸீர் உயிரிழப்பை உறுதிப்படுத்தி ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த நிகழ்வை “இதயத்தை நொறுக்கும் விபரம்” எனக் குறிப்பிட்டார்.
“ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுகாவில் உள்ள வெங்கடேஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட நெரிசல் விபத்து எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்க அதிகாரிகளை உத்தரவிட்டுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமைச்சர் நாரா லோகேஷ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
“எகாதசி நாளில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் நம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு அரசு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறது” என அவர் கூறினார்.
இந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தை முழுவதுமாக அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|