Home>தொழில்நுட்பம்>ஆப்பிள் iPhone 17 Pr...
தொழில்நுட்பம்

ஆப்பிள் iPhone 17 Pro Max - டாப் 10 அப்டேட்கள்

bySuper Admin|2 months ago
ஆப்பிள் iPhone 17 Pro Max - டாப் 10 அப்டேட்கள்

iPhone 17 Pro Max: கேமரா முதல் பேட்டரி வரை புதிய அம்சங்கள்

2025-இன் மிகப்பெரிய ஸ்மார்ட்போன்: iPhone 17 Pro Max சிறப்பம்சங்கள்

2025 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் Apple iPhone 17 Series அறிமுகம் இன்னும் சில மணி நேரங்களில் நடைபெற உள்ளது. இதில் அதிக கவனத்தை ஈர்க்கப்போகும் சாதனமாக iPhone 17 Pro Max கருதப்படுகிறது.

இந்த மாடல், முந்தைய iPhone 16 Pro Max-னை விட அதிக மேம்பாடுகளும், புதிய தலைமுறை தொழில்நுட்பங்களும் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் முக்கியமாக, கேமரா, புராசஸர், பேட்டரி மற்றும் டிஸ்ப்ளே பகுதியில் ஆப்பிள் சில அதிரடி அப்டேட்களைச் சேர்த்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது, iPhone 17 Pro Max-ல் உள்ள 10 முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

1. கேமரா மேம்பாடு

iPhone 17 Pro Max-இல் பெரிய சதுர வடிவிலான கேமரா மாட்யூல் இருக்கும். 48MP டெலிபோட்டோ லென்ஸ் (முந்தைய 12MP-இல் இருந்து அப்டேட்) மற்றும் 8X ஆப்டிக்கல் ஜூம் அம்சம் வரலாம். முன்புறத்தில் 24MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. வீடியோ அப்டேட்கள்

முதல் முறையாக 8K வீடியோ பதிவு செய்யும் வசதி வரவுள்ளது. மேலும், முன் மற்றும் பின் கேமராக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தி வீடியோ எடுக்கக்கூடிய வசதியும் வழங்கப்படலாம்.

3. A19 Pro புராசஸர்

அடுத்த தலைமுறை A19 Pro சிப் (3nm) மூலம் iPhone 17 Pro Max இயங்கும். இது வேகம், எரிசக்தி திறன் ஆகியவற்றை அதிகரிக்கும்.

4. 12GB RAM

முந்தைய 8GB-க்கு பதிலாக இப்போது 12GB RAM வழங்கப்படலாம். இதன் மூலம் செயல்திறன், மின்னணு நுண்ணறிவு (AI) அம்சங்கள் ஆகியவை வலுவடையும்.

5. அதிக கொள்ளளவு பேட்டரி

முதல் முறையாக 5,088mAh பேட்டரி வழங்கப்படலாம். மேம்பட்ட MagSafe சார்ஜிங் மூலம் விரைவான சார்ஜ் கிடைக்கும். கூடுதலாக 25W வயர்லெஸ் சார்ஜிங் (Qi 2.2) ஆதரவு இருக்கும்.

TamilMedia INLINE - 2025-09-08T160903


6. வடிவமைப்பில் மாற்றம்

பெரிய கேமரா மாட்யூலின் காரணமாக, பின்புறத்தில் உள்ள ஆப்பிள் லோகோ கீழே நகர்த்தப்படும். இதன் தடிமனும் சற்றே அதிகரிக்கக்கூடும் (8.725mm வரை).

7. சிறிய Dynamic Island

இந்த முறை, சிறிய மற்றும் கச்சிதமான Dynamic Island வழங்கப்படலாம்.

8. அலுமினியம்-கண்ணாடி கட்டமைப்பு


முந்தைய Titanium பதிப்புக்கு பதிலாக அலுமினியம் மற்றும் கண்ணாடி கலவையுடன் பின்புறம் உருவாக்கப்படலாம்.

9. வேப்பர் சேம்பர் குளிரூட்டல்

பெரிய அளவிலான பயன்பாட்டின் போது சாதனம் சூடாகாமல் இருக்க, Vapour Chamber தொழில்நுட்பம் சேர்க்கப்படும்.

10. டிஸ்ப்ளே அப்டேட்கள்

iPhone 17 Pro Max-இன் டிஸ்ப்ளே ஸ்கிராட்ச்-ரெசிஸ்டன்ட் மற்றும் ஆண்டி-ரெஃப்லக்டிவ் அம்சத்துடன் வரும். மேலும், மேட் ஃபினிஷ் தேர்வும் வழங்கப்படலாம்.

iPhone 17 Pro Max, கேமரா மற்றும் செயல்திறனில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டிருக்கும். இது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் வெளியீடாகக் கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

Tamilmedia.lk