Home>தொழில்நுட்பம்>iPhone 17 சீரிஸ் – வ...
தொழில்நுட்பம்

iPhone 17 சீரிஸ் – வெளியானது அதிரடி விலை அறிவிப்பு

byKirthiga|about 2 months ago
iPhone 17 சீரிஸ் – வெளியானது அதிரடி விலை அறிவிப்பு

ஆப்பிள் வெளியிட்ட iPhone 17, 17 Pro, Pro Max – விலை விவரம்

iPhone 17: ஆப்பிள் வெளியிட்ட புதிய ஐபோன் சீரிஸ் – விலை மற்றும் அம்சங்கள்

உலக ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஆப்பிள், தனது புதிய iPhone 17 Series-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் புதிய மாடல்களை வெளியிடும் ஆப்பிள், இந்த முறை இதுவரை இல்லாத வகையில் மிக மெலிதான வடிவமைப்புடன் iPhone 17-ஐ வெளியிட்டுள்ளது.

புதிய சீரிஸில் நான்கு மாடல்கள் உள்ளன: iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, iPhone 17 Pro Max. இவை அனைத்தும் மேம்பட்ட செயல்திறன், அதிகப்படியான பேட்டரி ஆயுள், சிறந்த கேமரா தொழில்நுட்பம் மற்றும் iOS 19 இயங்குதளத்துடன் வருகிறது.

இந்திய சந்தையில் விலை விவரம் பின்வருமாறு:

  • iPhone 17 – ரூ. 82,900 தொடக்க விலை

  • iPhone 17 Pro – ரூ. 1,34,900

  • iPhone 17 Pro Max – ரூ. 1,49,900


புதிய மாடல்கள் Cosmic Orange, Deep Blue, Silver ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளன. முன்பதிவு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக, செப்டம்பர் 26 முதல் அனைத்து Apple Store-களிலும் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Selected image


இதனுடன், ஆப்பிள் தனது AirPods 3-ஐயும் வெளியிட்டுள்ளது. இதய துடிப்பு கண்காணிப்பு, நேரலை மொழிபெயர்ப்பு போன்ற வசதிகளுடன், இந்தியாவில் இதன் விலை ₹25,900 என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய iPhone 17 சீரிஸ் அறிமுகம், இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் போட்டியை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, குறைந்த பட்ஜெட்டில் 30 கோடிக்கு குறைவான முதலீட்டில் உருவாக்கப்பட்ட iPhone 17 Air மாடல், இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்