iPhone-ல் பிற App Store-களுக்கு வழி திறந்தது!
Apple-இன் மூடிய App System-ஐ சவாலுக்கு உள்ளாக்கிய UK முடிவு
Apple & Google-க்கு எதிராக CMA எடுத்த கடுமையான நடவடிக்கை!
பிரிட்டனில் Apple நிறுவனத்திற்கு எதிராக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய முடிவை போட்டியாளர்கள் வரவேற்று வருகின்றனர். iPhone-ல் தற்போது Apple App Store வழியாக மட்டுமே பயன்பாடுகள் (apps) பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால், இந்நிலையை மாற்றி, Apple தனது சாதனங்களில் பிற நிறுவனங்களின் App Store-களையும் அனுமதிக்க வேண்டும் என பிரிட்டனின் Competition and Markets Authority (CMA) அறிவித்துள்ளது.
இந்த முடிவு Apple-இன் “closed system” என்ற அடிப்படை கொள்கைக்கு பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. CMA, Apple மற்றும் Google ஆகியவற்றை “strategic market status” உடையதாக அறிவித்துள்ளது. அதாவது, இவ்விரு நிறுவனங்களும் மொபைல் துறையில் மிகப்பெரிய ஆட்சிச் சக்தி பெற்றுள்ளன என்பதைக் குறிக்கிறது.
Apple இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “இது பயனாளர்களின் தனியுரிமையை பாதிக்கும், புதிய அம்சங்கள் தாமதமாக வரும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர். Google இதை “disappointing, disproportionate and unwarranted” என குறிப்பிட்டுள்ளது.
CMA தெரிவித்ததாவது, “இந்நிறுவனங்கள் புதுமையை மற்றும் போட்டியை கட்டுப்படுத்தும் வகையில் செயல்படக்கூடும். ஆனால் எந்தவித குற்றச்சாட்டும் நாங்கள் முன்வைப்பதில்லை” என.
UK-யில் பயன்படுத்தப்படும் மொபைல் சாதனங்களில் 90-100% வரை Apple மற்றும் Google-இன் operating systems (iOS மற்றும் Android) பயன்படுத்தப்படுகின்றன. இதில் iPhone பயனாளர்கள் 48.5% அளவில் உள்ளனர் என்று Uswitch அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், CMA, Apple மற்றும் Google தங்களது App Store-களில் போட்டியாளர் Apps-க்கு நியாயமான இடமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், பயனாளர்கள் Apple மற்றும் Android சாதனங்களுக்கு இடையே எளிதாக மாற்றம் செய்ய முடியும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Appleக்கு இது ஒரு பெரிய பின்னடைவு. ஏனெனில், இதேபோன்ற முடிவை ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஏற்கனவே எடுத்துள்ளது. அப்போது Apple மீது அபராதம் விதிக்கப்பட்டதுடன், சில புதிய அம்சங்கள் (Apple Intelligence போன்றவை) EU நாடுகளில் இன்னும் அறிமுகமாகவில்லை. இதற்கு கடுமையான விதிமுறைகள் காரணம் என Apple கூறியுள்ளது.
Google பக்கம் கூறப்படுவது, Android தளம் திறந்த மூல (open source) அமைப்பாக இருப்பதால், போட்டியாளர்கள் தங்களது App Store-களை உருவாக்கி வழங்க முடிகிறது என்பது. எனவே CMA முடிவு தேவையற்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நுகர்வோர் அமைப்பு Which? தெரிவித்ததாவது, “இந்த வகை விதிகள் உலகின் பிற பகுதிகளில் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. பயனாளர்களுக்கு கூடுதல் தேர்வுகள் கிடைக்கின்றன” என.
இந்த முடிவு, பிரிட்டனில் மொபைல் உலகில் புதிய போட்டி சூழலை உருவாக்கக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|