Home>வாழ்க்கை முறை>Gen Z இளம் தலைமுறையி...
வாழ்க்கை முறை

Gen Z இளம் தலைமுறையினர் விரைவாக முதியவர்களாகிறார்களா?

bySuper Admin|4 months ago
Gen Z இளம் தலைமுறையினர் விரைவாக முதியவர்களாகிறார்களா?

பொதுவாக மனிதர்கள் உடல் அளவில் 30 வயதில்தான் வயதாகத் தொடங்குவர்.

சமூக ஊடகம், ஸ்டிரெஸ், உணவியல்: Gen Z-க்கு அதிக வயது தோற்றம்

இளம் தலைமுறையினர் என்றால் நவீன சிந்தனை, புத்துணர்ச்சி, அதிநவீன தொழில்நுட்பத்தில் தேர்ச்சி, உலகை மாற்றும் திறன் என பல நற்குணங்கள் நமக்குள் விரும்பம் ஏற்படுத்தும். ஆனால், அண்மையில் நடைபெற்ற ஒரு முக்கிய ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அதில், ஜென் Z தலைமுறையினர் (1997–2012 பிறந்தவர்கள்) கடந்த தலைமுறையினரை விட விரைவாக வயதாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இளம் வயதிலேயே முதுமையின் பாதிப்புகள் அவர்களின் தோற்றத்திலும், உடல் செயல்பாடுகளிலும் தெளிவாகக் காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முன்பு, பொதுவாக 30வயதிற்கு பிறகு மனிதர்களில் முதுமையின் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். ஆனால் Gen Z தலைமுறையினரிடம் 15 வயதிலேயே முதுமை பாதிப்புகள் தோன்றுவதைக் காணலாம். இது சாதாரணமாக இல்லை. அவர்கள் வாழும் வாழ்க்கைமுறையும், சுகாதாரமற்ற உணவுப் பழக்கங்களும், மன அழுத்தம், சமூக ஊடகங்களை நிர்வாகிக்க முடியாத மனநிலை போன்றவை இதற்குக் காரணம்.

Uploaded image



சமூக ஊடகங்களின் தாக்கம்

இன்றைய இளம் தலைமுறையினர் அதிக நேரத்தை Instagram, TikTok, YouTube போன்ற சமூக ஊடகங்களில் செலவழிக்கின்றனர். இது அவர்களின் மனநலத்தை பெரிதும் பாதிக்கிறது. தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் மனோநிலை, தனிமை உணர்வு, "perfect body" கலாசாரம் போன்றவை மன அழுத்தத்தை பெருக்குகின்றன. மன அழுத்தம் தானாகவே உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி வயதான தோற்றத்தை தூண்டுகின்றது.

உணவுப்பழக்கம் மற்றும் தூக்கமின்மை

நவீன வாழ்க்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை, உப்புகள், செயற்கை கலவைகள் நிறைந்த உணவுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. சரியான நேரத்தில் தூங்காமை, அதிக நேரம் மொபைல் உபயோகப்படுத்தல் மற்றும் தினசரி ஒழுங்குமுறை இல்லாதது உடலின் இயற்கை செயல்பாடுகளை மாற்றுகிறது. இதனால் சருமத்தின் இளமையை காக்கும் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன.

முகப்பராமரிப்பு?

இன்றைய இளம் தலைமுறை, இன்ஸ்டாகிராமிலும் யூடியூப்பிலும் காணும் இன்ஃப்ளூயன்சர்களின் தாக்கத்தில், பலவிதமான ஸ்கின் கேர் ப்ராடக்ட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவை வயதான தோற்றத்தை தடுக்கும் என்பதற்குப் பதிலாக, நூறாண்டுகளாக இயற்கைபூர்வமாக வளர்ந்த சருமத்தை சிதைக்கும் முடிவுகள் ஏற்படுகின்றன.

Uploaded image




மன அழுத்தமும் நகர வாழ்க்கைச் சூழலும்

சிறுவயதிலிருந்தே அதிக பணி அழுத்தம், படிப்பு, போட்டிகள், எதிர்பார்ப்புகள் போன்ற காரணிகள் மூலமாக மன அழுத்தம் பெருகுகிறது. பெருநகரங்களில் வசிப்பவர்கள் அதிகமான ஒலியுடன் கூடிய சூழலில் வாழ்ந்தாலும், உணர்வுப் பாதுகாப்பின்மையை அனுபவிக்கிறார்கள். இந்த மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தையும், சருமத்தின் இளமையையும் குறைக்கிறது.

மில்லேனியல்களுக்கும் பாதிப்பு தொடர்கிறது...

இதே பாதிப்பு, ஜென் Z தலைமுறையை மட்டுமல்ல, முந்தைய தலைமுறையான மில்லேனியல்களுக்கும் (1981–1996) தொற்றிக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. வேலை, குடும்ப பொறுப்புகள், நிதி குறைபாடு மற்றும் தனிமை உணர்வு இவர்களையும் அடிக்கடி மன அழுத்தத்துக்குள்ளாக்குகிறது.

Uploaded image




இன்றைய இளம் தலைமுறை சவாலான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சூழலில் வளர்ந்து வருகிறார்கள். ஆனால் இந்த சூழல் அவர்களின் உடலியல் வளர்ச்சியை விரைவில் முடக்குகிறது. ஆரோக்கியமான உணவு, சரியான தூக்க விழிப்புணர்வு, மன அமைதி தரும் செயல்கள், சமூக ஊடகங்களின் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு போன்றவை இளம் தலைமுறையை விரைவில் முதுமைக்குள் தள்ளாமல் காக்கும் முக்கிய வழிகள்.

இது காலத்தின் எச்சரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டிய விஷயம்!