இலங்கை – கத்தார் வெளியுறவு உரையாடல்
துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கத்தார் அமைச்சருடன் பேச்சு
அமைதி, இறையாண்மை மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து இலங்கை – கத்தார் இடையே கலந்துரையாடல்
இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, இன்று கத்தாரின் வெளியுறவு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் சாட் பின் சுல்தான் அல் முரைகியுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார்.
இந்த உரையாடலில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கையின் கவலைகளை தெரிவித்ததோடு, இக்கடுமையான சூழ்நிலையில் நடுநிலையான தலையீடுகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் கத்தாரின் பங்களிப்பை பாராட்டியதாக அவர் தெரிவித்தார்.
“இறையாண்மை, நிலப்பரப்பு ஒருமைப்பாடு மற்றும் அமைதியையும் மனிதாபிமான உதவிகளையும் காக்கும் அவசரத் தேவையை மீண்டும் வலியுறுத்தினோம்” என துணை வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்திருப்பது, இந்த வாரம் டோஹாவில் இடம்பெற்ற இஸ்ரேலின் உயிரிழப்புகளை ஏற்படுத்திய தாக்குதலின் பிந்தையதாகும்.
அந்தத் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைமைப்பிரிவை இலக்காகக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.