Home>விளையாட்டு>ஆசியக் கோப்பை: இலங்க...
விளையாட்டு (கிரிக்கெட்)

ஆசியக் கோப்பை: இலங்கையின் வெற்றிக்கு 140 ரன்கள் இலக்கு

byKirthiga|about 2 months ago
ஆசியக் கோப்பை: இலங்கையின் வெற்றிக்கு 140 ரன்கள் இலக்கு

பங்களாதேஷ் 139/5 – இலங்கைக்கு 140 ரன்கள் சவால்

ஆசியக் கோப்பை முதல் ஆட்டம்: இலங்கைக்கு எளிய இலக்கு, ஆனால் அழுத்தம் அதிகம்

பங்களாதேஷ் அணியின் ஜாகிர் அலி மற்றும் ஷமீம் ஹொசைன் தலா 41, 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி, அணியை 139/5 என்ற மரியாதைக்குரிய நிலைக்கு கொண்டு சென்றனர்.

ஆரம்பத்தில் 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ், கடுமையான அழுத்தத்தில் சிக்கியிருந்தது. அந்த நேரத்தில் களம் இறங்கிய ஜாகிர் அலி மற்றும் ஷமீம் ஹொசைன் இருவரும் பொறுமையாக ஆடியதோடு, பின்னர் தேவையான ரன்களைச் சேர்த்தனர்.

இருவரும் இணைந்து 86 ரன்கள் குவித்து பங்களாதேஷை சற்றே நிம்மதியான நிலையில் நிறுத்தினர். இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றிக்காக 140 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.