இன்று அபுதாபியில் இலங்கை - பாகிஸ்தான் சூப்பர்-4 மோதல்
Asia Cup 2025: இறுதிப் போட்டி வாய்ப்புக்காக இலங்கை, பாகிஸ்தான் துடிப்பு
வங்காளதேசம், இந்தியா எதிரான தோல்விக்குப் பின் மீண்டு வர முயலும் இலங்கை-பாகிஸ்தான்
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 கட்டத்தில் இலங்கை அணி இன்று (23) அபுதாபியின் ஜாயெட் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கவுள்ளது.
சூப்பர்-4 கட்டத்தின் தங்களின் தொடக்கப் போட்டிகளில் இரண்டு அணிகளும் தோல்வி அடைந்துள்ளன. வங்காளதேசம் இலங்கையை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது. இந்தியா பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வென்றது.
குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் சர்ச்சைக்குரியதாக அமைந்தது. போட்டி முடிவில் வீரர்களுக்கிடையில் கடும் வாய்த்தகராறு ஏற்பட்டதுடன், வழக்கம்போல கை கொடுத்து வாழ்த்துவது தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இரு அணிகளும் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகின்றன. இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக அமைகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|