ஆஸ்திரேலிய மாணவர் விசா பெற முக்கிய தேவைகள்
2025-இல் ஆஸ்திரேலியாவில் படிப்பதற்கான விதிமுறைகள்
விசா, நிதி, கல்வி, வேலை வாய்ப்புகள் – முழுமையான வழிகாட்டி
வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள், உயர்தர கல்வி வசதிகள், வேலை வாய்ப்புகள், பாதுகாப்பான சூழல் ஆகிய காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆஸ்திரேலியாவை தேர்வு செய்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் படிப்பதற்கு மாணவர் விசா (Student Visa – Subclass 500) கட்டாயமாக தேவைப்படுகிறது.
ஆஸ்திரேலியா மாணவர் விசா பெற முக்கிய தேவைகள்
பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்க்கை
மாணவர்கள் முதலில் CRICOS (Commonwealth Register of Institutions and Courses for Overseas Students) இல் பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து Offer Letter மற்றும் அதன் பின் Confirmation of Enrolment (CoE) பெற வேண்டும்.
ஆங்கில மொழி திறன்
IELTS, TOEFL, PTE போன்ற ஆங்கிலத் தேர்வுகளில் தகுந்த மதிப்பெண்கள் அவசியம். பொதுவாக IELTS 6.0 அல்லது 6.5 தேவைப்படும் (பாடநெறி பொறுத்து மாறலாம்).
போதுமான நிதி ஆதாரம்
ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கும் போது கல்விக் கட்டணம், வாழ்வியல் செலவுகள், விமான கட்டணம் ஆகியவற்றைச் சந்திக்க போதுமான நிதி உங்களிடம் இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்க வேண்டும்.
ஒரு மாணவருக்கான ஆண்டிற்க்கான வாழ்வியல் செலவு சுமார் AUD 24,505 (2025 நிலவரப்படி).
OSHC (Overseas Student Health Cover)
ஆஸ்திரேலியாவில் மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு கட்டாயமாகும். அதற்காக OSHC வாங்கப்பட வேண்டும்.
GTE (Genuine Temporary Entrant) தேவைகள்
நீங்கள் உண்மையில் கல்வி பயில்வதற்காகவே ஆஸ்திரேலியாவிற்கு வருகிறீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். எதிர்கால இலக்கு, தாய்நாட்டுடன் உள்ள உறவு, நிதி நிலை ஆகியவற்றைப் பார்க்க அதிகாரிகள் தீர்மானிப்பார்கள்.
ஆரோக்கியம் மற்றும் நல்ல நடத்தைச் சான்றிதழ்
மருத்துவ பரிசோதனை மற்றும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் தேவைப்படும்.
ஆஸ்திரேலிய மாணவர் விசாவின் கால அளவு
மாணவர் விசா பொதுவாக, நீங்கள் பதிவு செய்துள்ள பாடநெறியின் காலத்திற்கு வழங்கப்படும்.
சில சந்தர்ப்பங்களில் பாடநெறி முடிந்த பின் சிறிய காலம் கூடுதலாக வழங்கப்படும்.
வேலை வாய்ப்பு – மாணவர் விசா
மாணவர் விசா பெற்றவர்கள், கல்வி நேரங்களில் வாரத்திற்கு 48 மணிநேரம் வரை வேலை செய்யலாம்.
விடுமுறை காலங்களில் முழுநேர வேலை செய்ய அனுமதி உண்டு.
விண்ணப்பிக்கும் முறை
விசா விண்ணப்பம் ஆன்லைன் (ImmiAccount) மூலம் செய்ய வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
பாஸ்போர்ட்
CoE (Confirmation of Enrolment)
ஆங்கில தேர்வு முடிவு
நிதி ஆதாரம்
மருத்துவச் சான்றிதழ்கள்
OSHC காப்பீடு சான்றிதழ்
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|