இந்திய அணியில் பெரிய மாற்றம் – BCCI அதிரடி முடிவு
விராட், ரோஹித் எதிர்காலம் கேள்விக்குறி – கேப்டனாக சுப்மன் கில்?
இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்த சில மாதங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட், டி20 போட்டிகளில் இருந்து விலகி, ஒருநாள் போட்டிகளில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்காக இந்த இருவரும் தயாராகி வரும் நிலையில், அவர்களின் ஃபிட்னஸ் குறித்து இன்னும் கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன.
இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடரில் கோலி, ரோஹித் இருவரும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவர்களுக்கு 2027 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதேவேளை, டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில்லின் மீது BCCI அதிக நம்பிக்கை வைத்துள்ளது.
அவரை விரைவில் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கலாமா என்ற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. டி20 அணியின் துணை கேப்டனாகவும் தற்போது கில் உள்ளார்.
சூரியகுமார் யாதவ் தற்போது டி20 கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவர் ஏற்கனவே 34 வயதைக் கடந்துவிட்டார். எனவே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரே கேப்டனாக சுப்மன் கிலை நியமிக்கலாமா என்ற விவாதம் BCCI-யில் நடந்து வருகிறது.
2027 உலகக் கோப்பை நேரத்தில் ரோஹித் சர்மாவுக்கு 40 வயது ஆக இருப்பதால், அவரது ஃபிட்னஸ் மீதான சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனால், வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடர் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவருக்கும் மிக முக்கியமான சோதனையாக அமையப்போகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|