தாயை கொன்ற 17 வயது சிறுமி – வெளியான அதிர்ச்சி காரணம்!
காதலன் உள்பட நான்கு சிறுவர்களுடன் இணைந்து தாயை கொன்ற பெங்களூரு சிறுமி
காதலன் உள்பட 4 சிறுவர்களுடன் சேர்ந்து தாயை கொன்ற 17 வயது சிறுமி – அதிர்ச்சி காரணம்
பெங்களூரு நகரை அதிரவைத்த கொலைச் சம்பவத்தில், தாயை காதலன் மற்றும் நான்கு சிறுவர்களுடன் சேர்ந்து கொன்ற 17 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவின் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சர்க்கிள் மாரம்மா கோவில் அருகே 36 வயது பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார் மற்றும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி, அந்த பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
தொடக்கத்தில் போலீசார் இதை தற்கொலை எனக் கருதி விசாரணை தொடங்கினர். ஆனால் பின்னர், அந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென காணாமல் போனது சந்தேகத்தை எழுப்பியது. இதையடுத்து, போலீசார் ராமநகர் மாவட்டம் கக்கலிபுராவில் பாட்டி வீட்டில் இருந்த அந்த சிறுமியை பிடித்து பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அதிர்ச்சியான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அந்த சிறுமி, தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, காதலன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் 18 வயதிற்குக் குறைவானவர்கள் என்றும், அதில் ஒருவருக்கு வயது 13 மட்டுமே என்றும் தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி தன்னுடன் படித்த இளைஞரை காதலித்து வந்ததாகவும், இதற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார். காதலுக்கு எதிராக கண்டித்ததால் கோபமடைந்த சிறுமி, தனது காதலனும் நண்பர்களும் இணைந்து தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர், உடலை படுக்கையறைக்கு இழுத்து, கழுத்தில் சேலை கட்டி மின்விசிறியில் தொங்கவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொடூரச் சம்பவம் குறித்து தற்போது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, 17 வயது சிறுமி உட்பட 5 பேரையும் சிறுவர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறுவர் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இடையேயான உறவின் சிக்கல்களைப் பற்றி சமூகத்தில் தீவிரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|