பிக் பாஸ் 9ல் சீரியல் ஸ்டார்ஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரி
சீரியல் ஸ்டார்ஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரி – குடும்பங்களுக்காக புதிய திருப்பு!
திவ்யா கணேஷ், பிரஜின், அமித் பார்கவ், சாண்ட்ரா – பிக் பாஸில் புதிய களமிறக்கம்
பிக் பாஸ் சீசன் 9 தற்போது புதிய திருப்பத்தை நோக்கி நகர்கிறது. வீட்டுக்குள் போட்டியாளர்களிடையே பரபரப்பும், சண்டைகளும் அதிகரித்துள்ள நிலையில், நிகழ்ச்சியின் நெருப்பை இன்னும் அதிகரிக்க புதிய வைல்ட் கார்ட் எண்ட்ரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரசிகர்கள் யார் வரப்போகிறார்கள் என்ற ஆர்வத்தில் இருந்த நிலையில், இன்று பிக் பாஸ் வெளியிட்ட ப்ரோமோ ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
புதிய வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகை திவ்யா கணேஷ், நடிகர் பிரஜின், நடிகர் அமித் பார்கவ் மற்றும் நடிகை சாண்ட்ரா பிரஜின் ஆகியோர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் விஜய் டிவி சீரியல் உலகில் பிரபலமானவர்கள் என்பதால், பிக் பாஸ் தற்போது குடும்பங்களையும் கவரும் ஒரு ரியாலிட்டி ஷோவாக மாறப்போகிறது என ரசிகர்கள் கருதுகின்றனர்.
ப்ரோமோவில் திவ்யா கணேஷ் தன்னம்பிக்கையுடன், “நான் ஸ்ட்ரைட் பார்வர்ட், பல முகமில்லாம ஒரே முகத்தோட விளையாடுவேன். என் கேமை ஆரம்பிக்கிறேன்” என சவாலாக கூறுகிறார்.
அதே சமயம் பிரஜின், “இந்த வீட்ல மரியாதையும் ஒழுக்கமும் இல்லை. யாருமே யாரை மதிக்க தெரியாது. நா ஒவ்வொருத்தருடைய மாஸ்க்கையும் கிழிக்கப்போறேன்” என்று கடுமையாக எச்சரிக்கிறார்.
அமித் பார்கவ் தனது நிதானமான குரலில், “வெளிலிருந்து எல்லாத்தையும் பார்த்து புரிஞ்சேன். இப்போ என் கேமை ஆரம்பிக்க நேரம் வந்துடுச்சு” என்கிறார். இதேபோல், சாண்ட்ரா, “இந்த வீட்டுல ஃபேக் கேம்ஸ் நிறைய நடக்குது. நா உள்ள போய் இதுக்கு Full Stop வைக்கிறேன்” என தீவிரமாக பேசுகிறார்.
ஏற்கனவே தாடி பாலாஜி – நித்யா, தினேஷ் – ரச்சிதா ஆகிய தம்பதிகள் பிக் பாஸில் பங்கேற்றுள்ளனர். இப்போது பிரஜின் – சாண்ட்ரா ஜோடி களமிறங்குவதால், இந்த சீசனின் போட்டி இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் “இந்த சீசன் ஆரம்பம் முதலே சண்டையா போய்ட்டு இருக்கு, இப்போ சீரியல் ஸ்டார்ஸ் வந்ததால் குடும்பங்களும் பார்ப்பாங்க!” என்று ஆர்வத்துடன் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் குழுவும் இந்த முறை குடும்ப பார்வையாளர்களை திரும்பப் பெறும் திட்டத்தில் வெற்றியடைவார்களா? அல்லது இந்த புதிய எண்ட்ரி இன்னும் சண்டை, சச்சரவுகளுக்கே வழிவகுக்குமா? என்ற கேள்விக்கு பதில், அடுத்த சில வாரங்களில் வெளிவரும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|