Home>பொழுதுபோக்கு>பிக்பாஸ் தொகுப்பாளர்...
பொழுதுபோக்கு

பிக்பாஸ் தொகுப்பாளர்களில் அதிக சம்பளம் பெறுபவர் யார்?

byKirthiga|29 days ago
பிக்பாஸ் தொகுப்பாளர்களில் அதிக சம்பளம் பெறுபவர் யார்?

இந்தி முதல் தமிழ் வரை – பிரபல நட்சத்திரங்களின் சம்பள விவரம் வைரலாகும்!

பிக்பாஸ் தொகுப்பாளர்களின் சம்பளம் – சல்மான் கானை மிஞ்சுமா விஜய் சேதுபதி?

இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ‘பிக்பாஸ்’ இருந்து வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி தொகுப்பாளர்களால் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு சீசனிலும் வீட்டுக்குள் நுழையும் போட்டியாளர்கள் பல சவால்களை எதிர்கொண்டு விளையாட, அவர்களை வழிநடத்தும் தொகுப்பாளர்களின் பங்கும் மிக முக்கியமானது. அவர்களின் பிரபலமும் நிகழ்ச்சியின் வரவேற்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிக்பாஸ் இந்தி பதிப்பில் நீண்டகாலமாக தொகுத்து வழங்கி வரும் சல்மான் கான், இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக சம்பளம் பெறும் தொகுப்பாளராக உள்ளார். தகவல்களின் படி, அவர் ஒவ்வொரு சீசனுக்கும் ரூ.250 கோடிக்கும் மேல் சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

தமிழில் தற்போது விஜய் சேதுபதி தொகுப்பாளராக இணைந்துள்ளார். அவருக்கு ஒரு சீசனுக்காக ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரை வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், தெலுங்கில் நாகார்ஜுனா ரூ.30 கோடி வரை, கன்னடத்தில் சுதீப் ரூ.20 கோடி வரை, மலையாளத்தில் மோகன்லால் ரூ.18 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. மராத்தி பிக்பாஸ் தொகுப்பாளர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் ரூ.10 கோடி வரை பெறுகிறார் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் நிகழ்ச்சியின் TRP மற்றும் ரசிகர் ஆதரவைப் பொருத்து சம்பளங்கள் மாறுபடுகின்றன. இருப்பினும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது தனித்தன்மையால் பார்வையாளர்களின் மனதை கவர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்