Home>பொழுதுபோக்கு>பிக் பாஸ் வாய்ஸ் கொட...
பொழுதுபோக்கு

பிக் பாஸ் வாய்ஸ் கொடுத்தவர் வீட்டுக்குள் - யார் அவர்?

byKirthiga|2 days ago
பிக் பாஸ் வாய்ஸ் கொடுத்தவர் வீட்டுக்குள் - யார் அவர்?

தமிழ் பிக் பாஸ் சீசன் 9-ல் வைல்ட் கார்டாக நுழைந்த குரல் பின்னணி நாயகன்

பிக் பாஸ் குரல் கொடுத்தவர் இப்போது போட்டியாளராக! ரசிகர்கள் ஆச்சர்யம்

உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது தமிழில் தனது 9வது சீசனை கடந்த சில வாரங்களாக நடத்தி வருகிறது. பல சர்ச்சைகள், சண்டைகள், வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் புதிய திருப்பம் உருவாகியுள்ளது.

இந்த சீசனில் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பல புதிய போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அதில் முக்கியமாக அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர் அமித் பார்கவ்.

அமித் பார்கவ் ஒரு பிரபல தொலைக்காட்சி நடிகர். விஜய் டிவியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடர் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். பின்னர் பல தொடர்களிலும் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். ஆனால் அவரின் இன்னொரு திறமை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமித், முன்னதாக கன்னட பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்குப் வாய்ஸ் ஓவர் (Voice Over) கொடுத்தவர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது, பிக் பாஸ் வீட்டில் “Bigg Boss to all housemates…” என குரல் கொடுத்த அதே வகையில் பணியாற்றியவர் அவர் தான்.

இப்போது அந்த குரல் கொடுத்த நபர் தானே போட்டியாளராக பிக் பாஸ் தமிழ் 9-ல் கலந்துகொள்வது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை குரலால் மட்டுமே தொடர்பில் இருந்த அவர், இப்போது நேரடியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார் என்பது ஒரு வித்தியாசமான திருப்பமாக ரசிகர்களால் கூறப்படுகிறது.

அமித்தின் இந்த நுழைவு நிகழ்ச்சிக்கு புதிய சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள், “பிக் பாஸாக குரல் கொடுத்தவர் இப்போது பிக் பாஸின் ஆட்டத்தில்!” என்று சமூக வலைதளங்களில் உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்