பிக் பாஸ் 9 - யார் யார் உள்ளே?
பிக் பாஸ் சீசன் 9 – சர்ச்சை பிரபலங்கள் வருகை!
அக்டோபர் 5 முதல் பிக் பாஸ் சீசன் 9 – யார் யார் உள்ளே?
தமிழ் தொலைக்காட்சியில் அதிக வரவேற்பைப் பெறும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தனது 9ஆம் சீசனுடன் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ஆம் திகதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். அதே நேரத்தில், ஜியோ சினிமா (JioCinema) டிஜிட்டல் தளத்தில் 24/7 நேரலையாக காணும் வசதியும் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை, சீசன் 8 முதல் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். புதிய சீசன் குறித்து தயாரிப்புக் குழு பல சுவாரஸ்யமான மாற்றங்களை அறிவித்துள்ளதால், இந்த முறை கூடுதல் விறுவிறுப்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய சீசன்களில் ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் முத்துக்குமரன் ஜெகதீசன் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.
இம்முறை இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, டிவி நடிகைகள் ஜனனி, பரினா ஆசாத் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக இருப்பார்கள் என பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
அதோடு, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் கூட பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களும் இந்த முறை பங்கேற்கவிருக்கிறார்கள் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. அதற்கமைய, வாட்டர்மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் டாக்டர் திவாகர் பிக் பாஸ் சீசன் 9 இல் கலந்து கொள்வார் என செய்திகள் உறுதியாகியுள்ளன.
தன்னுடைய சர்ச்சைகள், யூடியூப் டிரெண்டிங் வீடியோக்கள் மற்றும் திரைப்பட முயற்சிகள் காரணமாக ஏற்கனவே அதிக கவனம் பெற்றிருக்கும் இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால், நிகழ்ச்சி நிச்சயம் ரசிகர்களுக்கு நிறைய டிராமா மற்றும் பொழுதுபோக்கு தரும் என்பதில் ஐயமில்லை.