பிக்பாஸ் 9 போட்டியாளர் லிஸ்ட் வெளியானதா?
BiggBoss 9: யுவன் மயில்சாமி முதல் ஜனனி வரை வலம் வரும் லிஸ்ட்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 9 போட்டியாளர்கள்?
பிக்பாஸ் தமிழ் 9வது சீசன் வரும் அக்டோபர் 5ஆம் திகதி பிரம்மாண்டமாக தொடங்கவிருக்கிறது.
100 நாட்கள் தொடர்ச்சியான கலாட்டா, சண்டை, வாக்குவாதம், ஆட்டம்–பாட்டம் என முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் தரப்போகிறது.
இந்த சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது ஏற்கனவே ரசிகர்களுக்கு எக்ஸைட்டிங் நியூஸ். அவரை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட புரொமோ வீடியோக்களும் வெளியிடப்பட்டு பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் என கூறப்படும் ஒரு லிஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள்:
ஸ்ரீகாந்த் தேவா (இசையமைப்பாளர்)
யுவன் மயில்சாமி (நகைச்சுவை நடிகர்)
புவிஅரசு
ஜனனி அசோக்குமார் (நடிகை)
பரீனா ஆசாத் (நடிகை)
அஹமத் மீரன் (யூடியூபர்)
இந்த லிஸ்டில் உள்ளவர்கள் தான் பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் என கூறப்பட்டாலும், இது எவ்வளவு உண்மை என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
ரசிகர்கள் மத்தியில் இப்போது பிக்பாஸ் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் 9, தொடங்கும் முன்பே எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|