பிக் பாஸ் தமிழ் 9 ஆரம்பம் – போட்டியாளர்கள் பட்டியல்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – யார் யார் கலந்து கொண்டிருக்காங்க?
திரை நட்சத்திரங்கள், சமூக பிரபலங்கள், மாடல்கள் – பிக் பாஸ் வீட்டில் கலகலப்பான குழு!
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் அதன் ஒன்பதாவது சீசனுடன் இன்று அக்டோபர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.
விஜய் சேதுபதி வழக்கம்போல் தொகுத்து வழங்கும் இந்த சீசனில், பல துறைகளில் இருந்து வந்த பிரபலங்கள் மற்றும் புதுமுகங்கள் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளனர்.
முதல் போட்டியாளராக மருத்துவர் திவாகர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவரை தொடர்ந்து மாடல் அரோரா சின்க்ளேர், விஜே பார்வதி, புதுக்கோட்டை துஷார், சமூக ஊடக பிரபலம் கனி, சபரிநாதன், இயக்குனர் பிரவீன் காந்தி, மாடல் கெமி, நடிகை ஆதிரை, நடன கலைஞர் ரம்யா ஜோ, கேரளா மாடல் அப்சரா CJ, வினோத், வியானா, நந்தினி, விக்ரம் கமருதீன் மற்றும் கலையரசன் உள்ளிட்ட பலர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.
இந்த சீசனில் புதுமையான போட்டியாளர்கள், திருநங்கை ஒருவரின் பங்கேற்பு, மற்றும் மீனவப் பின்னணியிலிருந்து வந்த ஒரு பெண் என பல்விதமான கலவையுடன் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
மகாநதி தொடரின் நடிகர் குமரன் சிறப்பு என்ட்ரி செய்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இந்த முறை புதிய விதிமுறைகள், சவாலான டாஸ்க்கள் மற்றும் திருப்பங்களால் நிரம்பியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் தங்கள் விருப்பமான போட்டியாளர்களை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|