பிக் பாஸ் வீட்டில் சண்டை – திவாகர், கனி மோதல்!
ஜூஸ் பேக்டரி டாஸ்கில் சூடு பிடித்த போட்டி – சுபி, பிரவீன் வெற்றி பெற்றனர்!
Bigg Boss 9: டாஸ்கில் பதற்றம் – சுபி வெற்றி, திவாகர் மற்றும் கனிக்குள் தகராறு!
பிக் பாஸ் சீசன் 9 வீட்டில் நடந்த ஜூஸ் பேக்டரி டாஸ்க் கடைசி நாளில் கடும் பதற்றம் நிலவியது. கியூசி ஆபிசராக இருந்த திவாகர் பல ஹவுஸ்மேட்களை கடுமையாக பரிசோதித்ததில், வீட்டுக்குள் தகராறு வெடித்தது.
காலையில் பாரு மற்றும் சுபி இடையே ஏற்பட்ட உரையாடலே சண்டைக்குக் காரணமாக அமைந்தது. பாரு, “நாமினேஷன் ப்ரீ பாஸ் குடுப்பேனா, ஃபேவரா பண்ணுவேன்” என்று கூற, சுபி “விக்ரமுக்குத் தான் கொடுக்கப் போறேன்” என பதிலளித்தார். இதனால் இருவருக்கும் இடையே குளிர்ந்த போர் ஆரம்பமானது.
அதன் பிறகு, துஷார் மற்றும் கம்ருதீன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலை செய்வதில் அலட்சியம் காட்டியதாக துஷார் குற்றம் சாட்ட, கனி கம்ருதீனுக்கு ஆதரவாகப் பேசியதால் சூழ்நிலை தீவிரமடைந்தது. வாக்குவாதம் தள்ளும் நிலைக்கு சென்றபோது, வீட்டினர் இடையூறு செய்து சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையில் பாரு மைக் பேட்டரி விதிகளை மீறியதால் பிக் பாஸ் எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து கனி, “சொன்னதை கேட்க மாட்டீங்கனா இங்க இருக்க என்ன அவசியம்?” என கடுமையாகக் கூறினார். அதற்கு கம்ருதீன், “உங்களுக்கு ரூல்ஸ் தெரியல” என பதிலளித்ததால், இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
ஜூஸ் பேக்டரி டாஸ்க் தொடர்ந்தபோது, திவாகர் மற்றும் கம்ருதீன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சபரி மற்றும் பாருவும் பாட்டில் குவாலிட்டி குறித்து கடுமையாக வாதிட்டனர். பாரு “கிராக்கா இருந்த பாட்டில் எல்லாம் ரிஜெக்ட்” என்று கூற, சபரி “அது எல்லாம் சாதாரணம்” என எதிர்த்தார்.
டாஸ்க் முடிவில் சுபி தனது செயல்திறனால் அதிகமான பாட்டில்களை அப்ரூவ் செய்து வெற்றியாளர் ஆனார். கனி மற்றும் சுபி இடையே காயின் பிரிவில் சிறிய மோதல் ஏற்பட்டாலும், இருவரும் பின்னர் சமாதானமானனர்.
இறுதியில், பிக் பாஸ் அறிவிப்பின்படி பிரவீன் சூப்பர் டீலக்ஸ் வீட்டிற்குப் போய் நாமினேஷன் ப்ரீ பாஸ் பெற்றார். அதேபோல் சுபிக்கும் அதே வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், சுபி பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவரை சேவ் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாகவும், அவர் யாரை தேர்வு செய்வார் என்பது அடுத்த நாமினேஷனில் வெளிப்படும் என்றும் பிக் பாஸ் அறிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|