Bigg Boss வீட்டில் வைல்ட் காரட் என்ரி பெறும் சம்பளம்
பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியால் கிளம்பிய புதிய சர்ச்சை
பிக்பாஸ் தமிழ்: வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் சம்பள விவரம் வெளியானது
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்த அளவுக்கு ரேட்டிங் எட்டாத நிலையில், நிகழ்ச்சியை மீண்டும் உயிர்ப்பிக்க தயாரிப்பு குழு பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமானது, வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் அறிமுகம்.
இம்முறை பிக்பாஸ் வீட்டில் புதிய திருப்பமாக நான்கு பேர் வைல்ட் கார்ட் வழியாக நுழைந்துள்ளனர். இவர்களில் பிரஜின், சாண்ட்ரா, நடிகை திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் வருகையால் நிகழ்ச்சியில் புதிய உற்சாகமும் போட்டித் தன்மையும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. அதன்படி, சாண்ட்ராவுக்கு நாளொன்றுக்கு ரூ. 15 ஆயிரம், திவ்யா கணேஷ் மற்றும் அமித் பார்கவ் இருவருக்கும் ரூ. 20 ஆயிரம், பிரஜினுக்கு ரூ. 25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய போட்டியாளர்கள் ரசிகர்களிடையே மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக, பிரஜின் மற்றும் திவ்யா கணேஷ் இடையிலான தொடர்பு மற்றும் பழைய போட்டியாளர்களின் மீண்டும் வருகை என பல புதுமையான திருப்பங்களால் பிக்பாஸ் சீசன் 9 மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ரசிகர்கள், இவர்கள் வருகையால் நிகழ்ச்சி மெருகேறும் என எதிர்பார்க்கும் நிலையில், சிலர் இது வெறும் ரேட்டிங் உயர்த்தும் முயற்சி மட்டுமே என விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர். எது உண்மையாயினும், வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் வருகை பிக்பாஸ் வீட்டை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது என்பது உறுதி.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|