சிறுநீரில் இரத்தம்: காரணம், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
சிறுநீரில் இரத்தம் எப்போதும் புற்றுநோயா? உண்மை என்ன?
UTI முதல் சிறுநீரக கற்கள் வரை – இரத்தப்போக்கிற்கான பொதுவான காரணங்கள்
சிறுநீரில் இரத்தம் வருவது (Hematuria) பலரையும் அச்சுறுத்தும் ஒரு நிலையாகும். ஒருவர் தமது சிறுநீரில் சிவப்பு நிறம் அல்லது ரத்தக் கலவையை காணும்போது முதலில் நினைவுக்கு வருவது புற்றுநோயே.
ஆனால் உண்மையில், சிறுநீரில் இரத்தம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன, அவை அனைத்தும் புற்றுநோயைச் சுட்டிக்காட்டாது.
மருத்துவ ரீதியாக சிறுநீரில் இரத்தம் இரு வகைப்படும்.
கண் பார்வைக்கு தெளிவாகத் தெரியும் இரத்தம் (Gross Hematuria)
சோதனைக்குப் பின் மட்டுமே தெரியக்கூடிய மெல்லிய இரத்தம் (Microscopic Hematuria)
இரண்டு நிலைகளுமே கவனிக்க வேண்டியவை.
சிறுநீரில் இரத்தம் வருவதற்கான முக்கிய காரணங்கள்
சிறுநீர் பாதை தொற்று (UTI) – சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம், மற்றும் ரத்தக் கலவையுடன் கூடிய சிறுநீர் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
சிறுநீரக கற்கள் – சிறுநீரக கற்கள் சிறுநீரில் இரத்தம், கடுமையான முதுகுவலி, வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.
மருந்துகள் மற்றும் உணவு – சில ஆண்டிபயாட்டிக் மருந்துகள், ரத்தக் கசிவை தடுக்கக் கொடுக்கப்படும் மருந்துகள் மற்றும் பீட்ரூட், பிளாக்பெர்ரி போன்ற உணவுகள் சிறுநீரை சிவப்பாக மாற்றக்கூடும்.
அதிக உடற்பயிற்சி – ஓட்டம், எடை தூக்குதல் போன்ற கடுமையான பயிற்சிகள் சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி தற்காலிக இரத்தத்தை உருவாக்கலாம்.
சிறுநீரக நோய்கள் – சிறுநீரக அழற்சி (Glomerulonephritis) போன்ற நோய்கள் Hematuria-வுக்கான காரணங்களில் ஒன்றாகும்.
புற்றுநோய் – மலம் கழிக்கும் பாதை, சிறுநீரகம் அல்லது மப்பை புற்றுநோய் இருந்தால் சிறுநீரில் இரத்தம் தென்படலாம்.
அறிகுறிகள்
சிவப்பு அல்லது பழுப்பு நிற சிறுநீர்
எரிச்சலுடன் கூடிய சிறுநீர் கழித்தல்
முதுகுவலி அல்லது பக்கவாட்டுவலி
காய்ச்சல், உடல் சோர்வு
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை
பரிசோதனை மற்றும் சிகிச்சை
சிறுநீரில் இரத்தம் வந்தவுடன் மருத்துவரை அணுகுவது மிக அவசியம். பொதுவாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்:
சிறுநீர் பரிசோதனை (Urine Test)
அல்ட்ராசவுண்ட், CT Scan போன்ற இமேஜிங் பரிசோதனைகள்
சிஸ்டோஸ்கோப்பி (மப்பை பரிசோதனை)
சிகிச்சை காரணத்தைப் பொறுத்தே வழங்கப்படும்:
UTI க்கானது ஆண்டிபயாட்டிக் மருந்துகள்
சிறுநீரக கற்களுக்கு மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை
புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்சை (கீமோ, அறுவை சிகிச்சை)
சிறுநீரில் இரத்தம் வந்தாலே அது புற்றுநோய் எனக் கருதுவது தவறு. ஆனால் இதை புறக்கணிப்பதும் மிகப் பெரிய ஆபத்து. Hematuria தொடர்ந்து வந்தால் உடனடியாக நிபுணர் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|