Wi-Fi வேகம் குறைகிறதா? இந்த டிப்ஸ் பின்பற்றவும்
வீட்டில் Wi-Fi சிக்னல் பலவீனமா? இதோ எளிய தீர்வு
Wi-Fi வேகத்தை அதிகரிக்க முக்கிய டிப்ஸ்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், Wi-Fi இல்லாமல் ஒரு நாளும் வாழ்வது சாத்தியமில்லாத விஷயமாகி விட்டது.
ஆன்லைன் வகுப்புகள், Work From Home, OTT பிளாட்ஃபார்ம்களில் திரைப்படம், கேமிங், ஷாப்பிங்—எதற்கெல்லாம் இணையம் தேவைப்படுகிறதோ, அவற்றிற்கெல்லாம் Wi-Fi-யே முதன்மை ஆதாரம்.
ஆனால், பல குடும்பங்களில் Wi-Fi சிக்னல் பலவீனமாக இருந்தால், வேகம் குறைந்து, பயனர்கள் அடிக்கடி சிரமப்படுகிறார்கள். இதற்கான காரணம் சாதாரணமான ஒன்றாக இருந்தாலும், அதற்கான தீர்வு மிகவும் எளிது.
டெக் நிபுணர்கள் கூறுவதுபோல், சில சிறிய மாற்றங்கள் Wi-Fi வேகத்தை பல மடங்கு அதிகரிக்க முடியும். அந்த எளிய டிப்ஸ் என்னென்ன என்பதை பார்ப்போம்.
Router சரியான இடத்தில் இருக்க வேண்டும்
Wi-Fi ரௌட்டரை தரையில் அல்லது சுவர் ஓரம் வைப்பது தவறான நடைமுறை. இது சிக்னலை பலவீனப்படுத்துகிறது. அதற்கு பதிலாக, ரௌட்டரை வீட்டின் மையப்பகுதி மற்றும் உயரத்தில் வைக்க வேண்டும். மேலும், மைக்ரோவேவ், வயர்லெஸ் ஃபோன், உலோக பொருட்களுக்கு அருகில் வைக்கக் கூடாது.
Wireless Interference-ஐ குறையச் செய்யுங்கள்
Bluetooth ஸ்பீக்கர்கள், ஹெட்போன்கள், மற்ற Wi-Fi நெட்வொர்க்குகள் எல்லாம் சிக்னலுக்கு குறுக்கிடக்கூடும். அப்படியென்றால் ரௌட்டரின் சேனல் (Channel) மாற்றி வைப்பது நல்லது.
புதிய Router முக்கியம்
3–4 வருடங்களுக்கு மேலான ரௌட்டர்கள் பழையதாகிவிடும். Wi-Fi 6 அல்லது Wi-Fi 6E சப்போர்ட் செய்யும் Dual Band / Tri-Band ரௌட்டர் பயன்படுத்தினால் வேகம் மற்றும் கவரேஜ் இரண்டும் அதிகரிக்கும்.
Software Updates அவசியம்
ரௌட்டரின் Firmware-ஐ அடிக்கடி அப்டேட் செய்யாமல் விட்டால், வேகமும் பாதுகாப்பும் பாதிக்கப்படும். அதனால் Update செய்வது கட்டாயம்.
Mesh Wi-Fi அல்லது Range Extender
பெரிய வீடுகளில் சில இடங்களில் Wi-Fi சிக்னல் கிடைக்காமல் போகலாம். அப்போ Mesh Wi-Fi System அல்லது Range Extender பயன்படுத்தினால், வீட்டு முழுவதும் ஒரே மாதிரியான சிக்னல் கிடைக்கும்.
Network Security
Wi-Fi Password பலவீனமாக இருந்தால், அண்டை வீட்டார் கூட உங்களது நெட்வொர்க்கை பயன்படுத்தலாம். அதனால், வலுவான Password மற்றும் WPA2 / WPA3 Encryption பயன்படுத்துவது அவசியம்.
Wired Connection for Heavy Devices
Smart TV, Gaming Console, Desktop போன்றவற்றை Ethernet கேபிள் மூலம் இணையத்துடன் இணைத்தால், Wi-Fi-க்கு வரும் சுமை குறைந்து, வேகம் மேம்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|