இலங்கை
பேருந்து அலங்கார உத்தரவு ரத்து
byKirthiga|about 2 months ago
பேருந்துகளில் அலங்கார உபகரண அனுமதி ரத்து – போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு
பேருந்துகளில் அலங்கார உபகரணங்கள் பொருத்த அனுமதி ரத்து
பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் அலங்காரங்கள் மற்றும் பிற உபகரணங்களை பொருத்த அனுமதித்திருந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட அந்த சுற்றறிக்கை 2025 செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் செல்லுபடியாகாது.
மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க, அனைத்து துணை ஆணையாளர்கள், தலைமை வாகன பரிசோதகர்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு உள் சுற்றறிக்கை மூலம் இந்த தகவலை அறிவித்துள்ளார்.