அரிசி வகைகளுக்கான விலைக் கட்டுப்பாடு அறிவிப்பு
21 முதல் நடைமுறைக்கு வரும் புதிய அதிகபட்ச சில்லறை விலை
இறக்குமதி அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவித்த நுகர்வோர் விவகார ஆணையம்
இலங்கையின் நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை அறிவித்து புதிய அரசிதழ் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: ரா அரிசி (Raw Rice) ஒரு கிலோகிராமுக்கு ரூ.210, நாடு (Nadu) ரூ.220, சம்பா (Samba) ரூ.230, பொன்னி சம்பா (Ponni Samba) அல்லது கீரி சம்பா (Keeri Samba) ரூ.240 மற்றும் கீரி பொன்னி அல்லது பால் பொன்னி (Kiri Ponni / Paal Ponni) ரூ.255 என நுகர்வோர் விவகார ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தகைய விலை கட்டுப்பாடு நடவடிக்கை, சந்தையில் ஏற்படும் விலை ஏற்றத்தாழ்வை தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும், நுகர்வோர் நலனை உறுதிசெய்வதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், விற்பனையாளர்கள் இந்த விலைகளை மீறி விற்பனை செய்வதற்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|