Home>இலங்கை>கட்டுப்பாட்டு விலையை...
இலங்கை

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்ற கடைகள் சோதனை

byKirthiga|about 1 month ago
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்ற கடைகள் சோதனை

விலையை மீறி அரிசி விற்ற 100-க்கும் மேற்பட்ட கடைகள் மீது சோதனை

CAA சோதனை – 105 கடைகள் மீது நடவடிக்கை, அபராதம் மற்றும் சிறைத் தண்டனை எச்சரிக்கை

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) கடந்த இரண்டு வாரங்களில் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலையில் அரிசி விற்ற 105 கடைகளில் சோதனை நடத்தியுள்ளது.

அதிகாரசபை வெளியிட்ட அறிவிப்பில், விலை ஒழுங்குமுறையை மீறி அதிக விலையில் அரிசி விற்ற வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி யாராவது அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

CAA சட்டத்தின் கீழ், தனிநபர் உரிமையாளர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ரூ.1 இலட்சம் முதல் ரூ.5 இலட்சம் வரை அபராதம் அல்லது அதிகபட்சம் 5 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தனியார் நிறுவனங்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், ரூ.5 இலட்சம் முதல் ரூ.50 இலட்சம் வரை அபராதம் விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

மேலும், அரிசி கையிருப்பு மறைத்து வைக்கப்பட்டால் அபராதம், சிறைத் தண்டனை ஆகியவற்றுடன் பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரமும் நீதிமன்றத்திற்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடம் மட்டும் அரிசி தொடர்பான 3,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் CAA தலைவர் ஹேமந்த சமரக்கோன் சமீபத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்