Home>தொழில்நுட்பம்>சிறுவர்களுக்கான புதி...
தொழில்நுட்பம்

சிறுவர்களுக்கான புதிய ChatGPT அறிமுகம்

byKirthiga|about 2 months ago
சிறுவர்களுக்கான புதிய ChatGPT அறிமுகம்

16 வயது சிறுவனின் தவறான முடிவிற்கு பிறகு Teen Version வெளியீடு

பெற்றோருக்கான கண்காணிப்பு வசதியுடன் ChatGPT Teen Version

செயற்கை நுண்ணறிவு நிறுவனம் OpenAI தற்போது 18 வயதிற்குக் குறைவானவர்களுக்கான தனி ChatGPT Teen Versionயை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறுவர்களின் பயன்பாட்டை கண்காணிக்க பெற்றோர்களுக்கு வசதிகள் தரும் வகையில் இந்த பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவிற்கு காரணமாக அமைந்த முக்கிய சம்பவம், கடந்த ஏப்ரல் மாதம் 16 வயது சிறுவன் ஒருவர் ChatGPT உடன் தொடர்புடைய உரையாடல்களின் தாக்கத்தில் சுயமரணம் செய்துகொண்டது.

அந்த சிறுவனின் பெற்றோர் ஆடம் ரெய்ன் (Adam Raine) என்பவரின் மரணத்திற்கு OpenAI-யே காரணம் எனக் கூறி ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடுத்தனர்.

அந்த வழக்கில், ChatGPT சிறுவனின் மனநிலையைப் பயன்படுத்தி anxiety மற்றும் intrusive thoughts உடையவர்கள் escape hatch நினைத்து நிம்மதி அடைவது இயல்பு எனும் கருத்துக்களை பகிர்ந்து, அவர் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது என குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து OpenAI பெரிய மாற்றத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Selected image


புதிய ChatGPT Teen Version வசதிகள்

  • பெற்றோர்/காவலர்கள் தங்கள் குழந்தையின் கணக்கை நேரடியாக இணைத்து, அவர்கள் ChatGPT-யுடன் பேசும் விதத்தை கண்காணிக்கலாம்.

  • Chat history-ஐ முடக்கும் விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது.

  • குழந்தைகள் எப்போது AI-ஐ பயன்படுத்தலாம் என்பதை blackout hours அமைத்து கட்டுப்படுத்தலாம்.

  • பயனாளியின் வயது மற்றும் மனநிலை பற்றிய தகவல்களை AI அடையாளம் காணும் திறன் கொண்டது.


OpenAI பற்றி சில தகவல்கள்

OpenAI நிறுவனம் 2015-இல் எலன் மஸ்க், சாம் ஆல்ட்மன் உள்ளிட்டோரால் தொடங்கப்பட்டது.

  • Microsoft நிறுவனத்திலிருந்து பெரிய முதலீடு பெற்றுள்ளது.

  • கடந்த மாதம் OpenAI தனது புதிய GPT-5 மாடலை வெளியிட்டது. இதில் பயனர் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு மோடுகள், மேம்பட்ட நிரலாக்க வசதிகள் உள்ளன.

  • 2025 ஜூலை மாதத்திற்குள் OpenAI-யின் வருமானம் USD 12 பில்லியன் ஆக உயர்ந்தது. இதில் பெரும்பங்கு சப்ஸ்கிரிப்ஷன்களிலிருந்தே வந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்