Home>வணிகம்>தங்கம் மலிவாகக் கிடை...
வணிகம்

தங்கம் மலிவாகக் கிடைக்கும் நாடுகள் – எங்கு லாபம்?

byKirthiga|29 days ago
தங்கம் மலிவாகக் கிடைக்கும் நாடுகள் – எங்கு லாபம்?

துபாய் முதல் மலேசியா வரை — தங்கம் வாங்க சிறந்த நாடுகள் பட்டியல்

வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்? — விதிமுறைகள் தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் அல்ல. அது ஒரு மங்களகரமான முதலீடு. குறிப்பாக திருமணம் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்கும் பழக்கம் அதிகரிக்கிறது.

ஆனால் தற்போது தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், நடுத்தர மக்களுக்கு அதை வாங்குவது கடினமாகியுள்ளது.

தங்கம் விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், சர்வதேச அரசியல் பதட்டங்கள் ஆகியவை அடங்கும். இதனால் தங்கம் உலகளவில் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.

ஆனால், சில நாடுகளில் தங்கம் இன்னும் மலிவு விலையில் கிடைக்கிறது. அந்த நாடுகளில் தங்கம் வாங்குவது இந்தியாவில் வாங்குவதைவிட குறைந்த விலையில் கிடைக்கும். ஃபோர்ப்ஸ் வணிக இணையதளத்தின் தகவலின்படி, குவைத், மலேசியா, ஓமான், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா மற்றும் பெரு ஆகிய நாடுகள் தங்கம் மலிவாகக் கிடைக்கும் முக்கிய நாடுகள் ஆகும்.

அவற்றில் குறிப்பாக துபாய் உலகளவில் தங்கம் வாங்க சிறந்த இடமாகும். காரணம், அங்கு தங்கத்துக்கு வரி விதிக்கப்படாது. அக்டோபர் 10, 2025 நிலவரப்படி, துபாயில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு AED 476.75 (சுமார் ரூ.10,800) ஆகும். இதேபோல, மலாவி, கொலம்பியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தங்கம் குறைந்த விலையில் வாங்கலாம்.

வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?


இந்திய சுங்க விதிமுறைகளின்படி, வெளிநாட்டில் இருந்து ஆண் பயணிகள் சுமார் 20 கிராம் தங்கம் வரை வரி இல்லாமல் கொண்டு வரலாம். ஆனால் அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.50,000-ஐத் தாண்டக் கூடாது. மேலும், அது ஆபரண வடிவில்தான் இருக்க வேண்டும்; தங்கப் பட்டைகள் அனுமதிக்கப்படாது.

பெண் பயணிகள் 40 கிராம் தங்கம் வரை சுங்க வரி இல்லாமல் கொண்டு வரலாம். அதற்கு மேல் தங்கம் கொண்டு வர விரும்பினால், சுங்க வரி செலுத்த வேண்டியிருக்கும்.

மொத்தத்தில், தங்கம் விலை உயர்ந்தாலும் துபாய் மற்றும் சில ஆசிய நாடுகள் தங்கம் வாங்க சிறந்த மற்றும் லாபகரமான இடங்களாகத் திகழ்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்