உணவுப் பொருட்கள் 2.9% ஆக உயர்வு - 2025 புள்ளிவிபரம்
செப்டம்பரில் கொழும்பு பணவீக்கம் 1.5% – புள்ளிவிபரத் திணைக்களம்
கொழும்பில் பணவீக்கம் 1.5% ஆக உயர்வு – உணவு சாராதவை சிறிதளவு குறைவு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்பட்ட மொத்த பணவீக்க விகிதம், 2025 செப்டம்பர் மாதத்தில் 1.5% ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, 2025 ஆகஸ்ட் மாதத்தில் பதிவான 1.2% விகிதத்துடன் ஒப்பிடும்போது அதிகரிப்பாகும்.
2025 செப்டம்பர் மாதத்திற்கான அனைத்து பொருட்களுக்குமான CCPI சுட்டெண் 193.7 எனப் பதிவாகியுள்ளது. இது, ஆகஸ்ட் மாத சுட்டெண் 193.3 என்பதிலிருந்து 0.4 புள்ளிகள் அதிகரித்ததாகக் காணப்படுகிறது.
உணவுப் பொருட்களின் ஆண்டாண்டு (Year-on-Year) அடிப்படையிலான பணவீக்கம் 2025 ஆகஸ்ட் மாதத்தில் 2.0% இருந்ததை ஒப்பிடும்போது,
செப்டம்பரில் 2.9% ஆக உயர்ந்துள்ளது. இதேசமயம், உணவு சாராத பொருட்களின் பணவீக்கம் 0.8% இலிருந்து 0.7% ஆக சிறிய அளவில் குறைந்துள்ளது.
மேலும், 2025 ஜூன் மாதத்தில் ஆண்டாண்டு அடிப்படையில், பணவீக்கத்திற்கு உணவுப் பொருட்கள் 0.94% அளவிற்கு பங்களித்திருந்தன எனவும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|