உடல் எடையை குறைக்க உடனே இந்த பழக்கத்துக்கு GOOD BYE
உடல் எடை குறையாம இருக்கிறதா? காரணம் இதுதான்!
எடை குறைக்க முயற்சி செய்தும் பலன் இல்லையா? இந்த பழக்கங்கள் தான் காரணம்!
பலர் உடல் எடையை குறைக்க பல வழிகளையும் முயற்சிக்கிறார்கள். சிலர் டயட் பின்பற்றுகிறார்கள், சிலர் ஜிம்முக்கு போகிறார்கள். ஆனா பல சமயங்களில் எடை குறையாமலே நின்று போகும். அதற்குக் காரணம் — நாமே தெரியாம செய்யும் சில பழக்கங்கள் தான். அவை என்னன்னு பார்ப்போம்.
முதல்ல, தண்ணீர் குறைவா குடிப்பது பெரிய தவறு. உடல் நன்றா வேலை செய்ய, கொழுப்பை எரிக்க தண்ணீர் முக்கியம். தினமும் குறைந்தது 8 கப் தண்ணீர் குடிச்சா, உடலின் மெட்டபாலிசம் வேகம் பெறும்.
ஜங்க் ஃபுட் — உடல் எடையை அதிகப்படுத்தும் முக்கிய காரணம். பேஸ்ட் புட்ஸ், பக்கோடா, சிப்ஸ், கார்பனேட்டட் பானங்கள் எல்லாம் உடனடி எரிசக்தி கொடுத்தாலும், அவை உடலில் கொழுப்பு சேர்க்கும். அதுக்குப் பதிலா வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளைக் கொள்வது நல்லது.
நேரமில்லாமல் சாப்பிடுவது கூட எடை குறைப்பை தடுக்கும். உணவை தினமும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்வது உடலின் செரிமான நேரத்தை சரி செய்வதுடன், பசியையும் கட்டுப்படுத்தும்.
மொபைல் பார்த்துக்கொண்டு சாப்பிடுவது கூட ஒரு பிழை. அப்படி சாப்பிடும்போது நம்மை நாமே எவ்வளவு சாப்பிட்டோம் என கவனிக்க முடியாது. இதனால் அதிக கலோரி உட்கொள்வோம்.
அதிகமாக டயட் பின்பற்றுவது நல்லதல்ல. மிகவும் குறைவாக சாப்பிடும் பழக்கம் உடலின் சக்தியைக் குறைத்து, பின்பு மீண்டும் எடை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே சமநிலையான உணவு முக்கியம்.
போதிய தூக்கமின்மை கூட எடையை அதிகப்படுத்தும். தூக்கக்குறைவு ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி பசியை தூண்டும். தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது அவசியம்.
மனஅழுத்தம் – இது பலருக்கும் தெரியாம ஒரு பெரிய தடையாக இருக்கும். மனஅழுத்தம் உடல் ஹார்மோன்களை மாற்றி, அதிக பசி, இனிப்பு ஆசை போன்றவற்றை ஏற்படுத்தும். தினமும் சில நிமிடங்கள் தியானம் அல்லது யோகா செய்தால் இது குறையும்.
இறுதியாக, உடற்பயிற்சி இல்லாமலே எடை குறையும் என நினைப்பது தவறானது. உடற்பயிற்சி தான் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பை எரித்து, தசைகளை வலுப்படுத்தும். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடை, யோகா, அல்லது லைட் எக்சர்சைஸ் செய்ய முயற்சி பண்ணுங்க.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|