கூலி பட நடிகர்களின் சம்பளம் - கோடியில் புரளும் ரஜினி
கூலி பட நடிகர்களின் சம்பளம் - ரஜினிகாந்த் முதல் ஆமீர் கான் வரை
ரஜினிகாந்த், ஆமீர் கான் உள்ளிட்ட நடிகர்கள் அதிர்ச்சி சம்பளம்
தமிழ் சினிமாவின் மிக எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியன் திரைப்படமாக உருவாகி வந்த கூலி படத்தில் நடித்த ரஜினிகாந்த், ஆமீர் கான் மற்றும் பல முக்கிய நடிகர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்கிய இப்படம் ஆகஸ்ட் 14 (இன்று) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இதில் நாகார்ஜூனா, ஆமீர் கான், ஷௌபின், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர், மேலும் அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியான பின்னர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்தது.
குறிப்பாக தெலுங்கு, மலையாள, கன்னடம், ஹிந்தியில் இருந்து பல முன்னணி நடிகர்கள் இதில் இணைந்துள்ளதால் கூலி பான் இந்தியன் அளவில் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.
இந்நிலையில் இவர்களின் சம்பளம் தான் தற்போது பேச்சுப்பொருளாகியுள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
வியக்க வைக்கும் சம்பளம்:
இந்த படத்தில் ஹீரோ ரஜினிகாந்த் சுமார் ரூ. 200 கோடி சம்பளம் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் ரூ. 150 கோடி ஊதியம் தீர்மானிக்கப்பட்டிருந்தது, ஆனால் படத்தின் முன்னோக்கிய வருமானம் காரணமாக கூடுதலாக ரூ. 50 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், படத்தில் சிறிய கௌரவ வேடத்தில் நடித்த ஆமீர் கானுக்கும் சுமார் ரூ. 20 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
மற்ற நடிகர்கள் சம்பளம்:
வில்லன் பாத்திரத்தில் நடித்த நாகார்ஜூனாவுக்கு ரூ. 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சத்யராஜ் ரூ. 5 கோடி, உபேந்திரா மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ. 4 கோடி, ஷௌபினுக்கு ரூ. 1 கோடி, மேலும் மோனிகாவின் பாடலில் நடனமாடிய பூஜா ஹெக்டேக்கு ரூ. 3 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் சம்பளம்:
இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 50 கோடி மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ. 15 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான் இந்தியன் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களுக்கும், இயக்குநருக்கும் இவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டமை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.