இலங்கைஅரசியல்
ரணில் விக்கிரமசிங்க வழக்கிற்கு நாளை விசாரணை
byKirthiga|11 days ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் நீதிமன்றத்தில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை (29) மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நிலுபுலி லங்கபுரவின் உத்தரவின் பேரில் ரிமாண்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 26ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டபோது, குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த மனுக்களை பரிசீலனை செய்த நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.
இப்போது அந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|