Home>ஆன்மீகம்>வீட்டு வாசலில் காகம்...
ஆன்மீகம்

வீட்டு வாசலில் காகம் கரைவதால் நிகழும் அசுப சகுனம்

bySite Admin|3 months ago
வீட்டு வாசலில் காகம் கரைவதால் நிகழும் அசுப சகுனம்

காகம் கரைத்தல்: நற்சகுனம் kற்றும் அசுப சகுனம்

வீட்டின் முன் காகம் கரைந்தால் அதன் அர்த்தம் என்ன?

காகங்கள் தமிழர் மரபில் முக்கிய இடம் வகிக்கின்றன. பளபளப்பான கருப்பு இறகுகள், கூர்மையான அலகு, தனித்துவமான குரல் இவை அனைத்தும் காகத்தை விசேஷமாக்குகின்றன.

இந்திய கலாச்சாரத்தில், காகம் எமனின் தூதர் என்றும், எதிர்காலத்தை முன்னறிவிக்கும் சக்தி கொண்டதாகவும் கருதப்படுகிறது.

நற்சகுனங்கள்


1. ஒற்றைக் காகம் கரைத்தல்

வீட்டு வாசல் அல்லது பால்கனியில் ஒரு காகம் உரத்த குரலில் கரைத்தால், வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என நம்பப்படுகிறது. காலையில் இது நடந்தால், நாள் முழுவதும் நல்ல செய்திகள் வரும்.


2. திசை சார்ந்த நல்ல சகுனம்

நண்பகலில் காகம் வடக்கு அல்லது கிழக்கு திசையில் கரைத்தால், அது செல்வமும் மகிழ்ச்சியும் வரும் அறிகுறி.


TamilMedia INLINE (55)


3. பயணத்திற்கு முன் கரைத்தல்

வீட்டைவிட்டு புறப்படும் முன் காகம் கரைத்தால், அந்த பயணம் வெற்றிகரமாக முடியும் என்று கருதப்படுகிறது.


4. நீர் பருகும் காட்சி

காகம் தண்ணீர் பருகுவது பண வரவு, வேலை உயர்வு, அல்லது நல்ல செய்தி கிடைக்கும் அறிகுறி.

அசுப சகுனங்கள்


1. கூட்டமாகக் கரைத்தல்

பல காகங்கள் ஒரே நேரத்தில் சத்தமிடுவது, வீட்டில் துன்பம் அல்லது நோய் வரப்போவதைக் குறிக்கும்.


2. தெற்கு திசையில் கரைத்தல்

காகம் தெற்கை நோக்கி கரைத்தால், அது பித்ரு தோஷம் இருப்பதைக் குறிக்கலாம்.


3. இறந்த காகம்

வீட்டு வளாகத்தில் இறந்த காகம் காணப்பட்டால், அது மிகக் கேடு. உடனடியாக தூய்மை சடங்கு செய்ய வேண்டும்.

TamilMedia INLINE (56)