Home>வாழ்க்கை முறை>தயிர் vs மோர்: செரிம...
வாழ்க்கை முறை (ஆரோக்கியம்)

தயிர் vs மோர்: செரிமானத்திற்கு எது சிறந்தது?

bySuper Admin|2 months ago
தயிர் vs மோர்: செரிமானத்திற்கு எது சிறந்தது?

குடல் ஆரோக்கியத்தில் தயிரும், மோரும்தான் - எது சிறப்பாகச் செயல்படுகிறது?

செரிமானத்தை மேம்படுத்தும் தயிர், மோர் — எதை அதிகம் தேர்வு செய்யலாம்?

நம் அன்றாட உணவுப் பழக்கத்தில் தயிரும், மோரும்தான் அதிகமாக இடம் பெறும் பால் சார்ந்த பானங்களாகும்.

இவை இரண்டும் நம் உடலுக்கு தேவையான ப்ரோபயாட்டிக்ஸ், கால்சியம், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

ஆனால், பலருக்கும் ஒரே கேள்வி - செரிமானத்திற்கு தயிர் நல்லதா, இல்லை மோர் நல்லதா?

தயிரின் நன்மைகள்

தயிர், பாலைவிட எளிதாகச் செரிமானமாகும். இதில் உள்ள ப்ரோபயாட்டிக் பாக்டீரியாக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர்வதற்கு உதவுகின்றன.

TamilMedia INLINE - 2025-09-08T183721


இதன் மூலம் செரிமானம் சீராக நடக்கிறது. மேலும், தயிர் உடலில் சூட்டை குறைக்கும் தன்மை கொண்டதால் வயிற்று எரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது. கால்சியம் நிறைந்ததால் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை தருகிறது.

மோரின் நன்மைகள்

மோர், தயிரை விட இன்னும் எளிதாகச் செரிமானமாகும். மோர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து தங்குகிறது. வெப்பமான காலநிலையில் மோர் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

வயிற்றுப்போக்கு அல்லது அஜீரணம் ஏற்பட்டால் மோர் மிக வேகமாக நிவாரணம் தரக்கூடிய பானமாக கருதப்படுகிறது. மோரில் உள்ள ப்ரோபயாட்டிக்ஸ் செரிமானக் கிரியையை மேம்படுத்துவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றன.

TamilMedia INLINE - 2025-09-08T183739


மேலும், இதில் சோடியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் இருப்பதால் உடலின் நீர்ச்சத்து சமநிலையை பராமரிக்கிறது.

எது சிறந்தது?

தயிரும், மோரும்தான் உடலுக்கு நன்மை தரும். ஆனால், செரிமானம் என்ற குறிப்பிட்ட அம்சத்தைப் பார்க்கும்போது, மோர் சிறந்த தேர்வாகும். ஏனெனில் மோர் திரவமாக இருப்பதால் உடனடியாகக் குடலில் உறிஞ்சப்படுகிறது, எளிதாகச் செரிமானமாகிறது.

வயிற்று எரிச்சல், கனமான உணவுக்குப் பிறகு ஏற்படும் அசௌகரியம் போன்றவை இருந்தால் மோர் குடிப்பது மிகச் சிறந்த தீர்வாகும்.

அதேசமயம், தினசரி உணவில் ஒரு கப் தயிரை சேர்த்துக் கொண்டால் நீண்ட காலத்தில் குடல் ஆரோக்கியமும், எலும்பு வலிமையும் மேம்படும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

Tamilmedia.lk